tamilnadu

img

தீயணைப்பு நிலையம் கறம்பக்குடியிலேயே தொடர வேண்டும் எம்.சின்னதுரை எம்எல்ஏ தலைமையில் சாலை மறியல்

தீயணைப்பு நிலையம் கறம்பக்குடியிலேயே தொடர வேண்டும் எம்.சின்னதுரை எம்எல்ஏ தலைமையில் சாலை மறியல்

புதுக்கோட்டை, ஜுலை 22-  புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் இயங்கி வரும்  தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றாமல் கறம்பக்குடி யிலேயே தொடர வலியுறுத்தி, கந்தர்வகோட்டை தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தலைமையில் செவ்வாய்க்கிழமை கறம்பக்குடியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் தீயணைப்பு மற்றும்  மீட்பு பணிகள் நிலையம் பல ஆண்டு களாக கறம்பக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரு கிறது. இந்நிலையத்தை 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பல்லவ ராயன்பத்தை கிராமத்தில் மாற்றுவ தற்கான நடவடிக்கையை அதிகாரி கள் மேற்கொண்டனர். இதற்கு கறம்பக்குடியில் உள்ள வர்த்த கர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். சம்மந் தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்  கொடுத்தும் வலியுறுத்தி வந்தனர். ஆனால், எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் தீயணைப்புத் துறையினர் மேற்படி பல்லவ ராயன்பத்தை கிராமத்தில் கட்டு மானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தை கறம்பக்குடியிலேயே தொடர வலியுறுத்தியும், 7 கிலோமீட்டருக்கு அப்பால் நடைபெறும் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும் கறம்பக்குடியில் செவ்வாய்க் கிழமை சாலைமறியல் நடைபெற்றது. கறம்பக்குடி சீனிகடை முக்கத் தில் நடைபெற்ற போராட்டத்திற்கு கந்தர்வகோட்டை தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை  தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர்,  விசிக மாவட்டச் செயலாளர் இளமதி அசோகன், காங்கிரஸ் வட்டாரத் தலைவர் ஞானசேகரன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஸ்ரீதர், த.அன்பழ கன், ஒன்றியச் செயலாளர் துரை. அரிபாஸ்கர், மனித நேய மக்கள் கட்சி சுலைமான், மனித நேய ஜன நாயக கட்சி ஜான், சிபிஐ ஒன்றியச்  செயலாளர் சேசுராஜ், சிபிஐ(எம்எல்) ஒன்றியச் செயலாளர் ரெங்கசாமி உள்ளிட்ட பலர் போராட்டத்தில் பங்கேற்றனர். கறம்பக்குடி சாலை மறியல் போராட்டத்தின் போது, கறம்பக் ்குடி நகரம் முழுவதும் வர்த்த கர்கள் கடையை அடைத்து போராட் டத்தில் பங்கேற்றனர். போராட்ட இடத்திற்கு வந்த புதுக்கோட்டை கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா, பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். தொடர்ந்து கறம்பக் குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடை பெற்றது.  பேச்சு வார்த்தையில், தீய ணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை கட்டுமானப் பணிக்கான இடம் கறம்பக்குடி புல எண் 155/2-இல் தமிழ்நாடு வீட்டுவசதி கழகத்தின் (திருச்சி) மூலம், தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வரும் வரை பல்லவ ராயன்பத்தையில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை நிறுத்தி  வைப்பது என முடிவு செய்யப் பட்டது. ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர், கறம்பக்குடி வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரி கள், வர்த்தகர்கள் பேச்சுவார்த்தை யில் பங்கேற்றனர்.