tamilnadu

img

என்சிசி மாணவர்களுக்கு தீ தடுப்பு, தீயணைப்பு பயிற்சி ஒத்திகை

என்சிசி மாணவர்களுக்கு தீ தடுப்பு   தீயணைப்பு பயிற்சி ஒத்திகை

மன்னார்குடி, அக். 16-  மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி என்சிசி ஆர்மி மற்றும் கடற்படை  மாணவர்களுக்கான தீத்தடுப்பு மற்றும் தீயணைப்பு பயிற்சி ஒத்திகை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.  உதவி தலைமை ஆசிரியர் பி. சங்கர் தலைமை வகித்தார். பள்ளிக் குழு உறுப்பினர் டி.ஆர். தியாகராஜன் முன்னிலை வகித்தார். கடற்படை என்சிசி அதிகாரி முனைவர். எஸ். அன்பரசு வரவேற்றுப் பேசினார். மன்னார்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தின் நிலைய அலுவலர் ப.ரமேஷ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இணைந்து பயிற்சி வழங்கினர்.  நிகழ்வில் வீட்டில், கேஸ் சிலிண்டர் கசிவால் ஏற்படுகிற தீ விபத்து, எரிகிற அடுப்பில் எண்ணெய் பாத்திரத்தில் ஏற்படுகிற தீ விபத்து, வெடி விபத்தினால் ஏற்படுகிற தீக்காயம் ஆகியவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளுதல் மற்றும் தவிர்த்தல் முறைகள் விளக்கப்பட்டன. மாணவர்கள் பெற்றோர்களின் பார்வையிலேயே வெடிகளை வெடிக்க வேண்டும், தீயணைப்பு கருவிகள் அல்லது தண்ணீர் வாளியினை உடன் வைத்திருக்க வேண்டும், வெடி வெடிக்கும் போது காற்றின் திசைக்கு எதிர் திசையில் பாதுகாப்பாக நகர வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன.