திரைக்கலைஞர் ரோபோ சங்கர் மறைவு அரசியல், திரையுலகத் தலைவர்கள் இரங்கல்
சென்னை: பிரபல திரைக்கலைஞர் ரோபோ சங்கர் (46) உடல்நலக்குறைவு காரணமாக வியாழக்கிழமை (செப்.18) சென்னையில் காலமானார். அவரது திடீர் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரை யுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த சங்கர் காமராசர் பல்கலைக்கழ கத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர். மாரி, புலி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சென்னையில் படப்பிடிப்பில் பங்கேற்று வந்த நிலையில், புதன்கிழமை(செப்.17) காலை படப்பிடிப்பு தளத்தில் திடீ ரென மயக்கமடைந்த ரோபோ சங்கர், பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரண மாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை (செப்.18) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. துணை முதல மைச்சர் உதயநிதி ஸ்டாலின், தொல்.திருமாவளவன், கமல் ஹாசன் உட்பட ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், ரோபோ சங்கரின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதில் திரையுலகினர் மட்டுமின்றி ஏராள மானோர் கலந்து கொண்டனர். பிறகு, வளசரவாக்கம் பிருந்தாவன் நகர் இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.