1959 -ல் கரீபியன் தீவு நாடான கியூபாவில் ஃபிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா தலைமையில் புரட்சி வெற்றி பெற்றது .சோசலிச கியூபா அரசு அமெரிக்காவின் 60 ஆண்டுகால பொருளா தாரத் தடைகளுக்கு மத்தியில் பல சாதனைகளை புரிந்துள்ளது .கல்வி இலவசம்; மருத்துவம் இலவசம்; சராசரி ஆயுட்காலம் 79.08 ஆண்டுகள். ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது கியூபாவிற்கு விஜயம் செய்தார் . ஹவானாவில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டது .2015 -ல் கியூபா அமெரிக்கா உறவுகளில் முன்னேற்றம் இருந்தது. 2017 முதல் 2021 வரை டொனால்டு டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தார். கியூபா மீதான பொருளாதார ,வர்த்தக ,நிதி தடைகளை தீவிரப்படுத்தினார். தன்னிச்சையாக 243 தடை நடவடிக்கைகளை திணித்தார் .இது கியூபாவின் வளர்ச்சியில் பல சிக்கல்களை ஏற்படுத்தியது .கடந்த 60 ஆண்டுகளில் 15 ஆயிரம் கோடி டாலர், ரூபாய் 11 .55 லட்சம் கோடி, கியூபாவிற்கு அமெரிக்க தடைகளால் இழப்பு ஏற்பட்டது. பயங்கரவாதம் ஊக்குவிக்கும் நாடுகளின் பட்டியலில் கியூபாவை அமெரிக்கா இணைத்துள்ளதால் உலக நாடுகளுடன் வணிகம் செய்வதிலும், நிதிப் பரிவர்த்தனை மேற்கொள்வதிலும் பல சிரமங்களை கியூபா சந்தித்து வருகிறது.
ஜோ பைடன் ஜனாதிபதிக்கு போட்டியிட்ட போது அவர் அளித்த பல்வேறு வாக்குறுதிகளில் ஒன்று, கியூபா மீதான தடைகள் தளர்த்தப்படும் என்பதுமாகும்.மே 16-ல் டிரம்ப் அறிவித்த பல்வேறு தடைகளில் சிலவற்றை தளர்த்துவதாக அறிவித்தார். அமெரிக்காவில் வாழும் கியூபா மக்கள் ,கியூபாவில் உள்ள தங்கள் உறவினர்களுக்கு ஆயிரம் டாலர் மட்டுமே வழங்கலாம் என்ற உச்சவரம்பை அகற்றினார் .கியூபா குடிமக்கள் அமெரிக்க விசா பெறுவது துரிதப்படுத்தப் பட்டுள்ளது. கியூபாவின் மாகாணங்களுக்கு விமான சேவை தொடங்கும். ஜோ பைடனின் இந்த அறிவிப்பு குறித்து கியூபாவின் வெளியுறவு அமைச்சகம் ,சரியான திசைவழியில் எடுக்கப்பட்ட சிறிய நடவடிக்கை என வர்ணித்துள்ளது. 60 ஆண்டுகளில் ஏற்பட்ட 15,000 கோடி டாலர் இழப்பு கியூபாவின் பொது சுகாதாரம், பொதுக் கல்வியை பாதித்துள்ளது. பயங்கரவாதம் ஊக்குவிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து கியூபாவை அமெரிக்கா நீக்க வேண்டும் என வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. வெனிசுலா மீதான கச்சா எண்ணெய் வணிக தடையையும் மே 17 இல் அமெரிக்கா ஓரளவு நீக்கி யுள்ளது. அமெரிக்க உயர் அதிகாரிகள் குழு, 5 ஆண்டு களில் முதன்முறையாக வெனிசுலாவிற்கு பயணம் செய்திருந்தது .அமெரிக்காவின் கச்சா எண்ணெய் இருப்பு வெகுவாக குறைந்து உள்ள நிலையில், வெனிசுலா கச்சா எண்ணெய்யை அமெரிக்கா வாங்கவே ஓரளவு வணிகத்தடை தளர்வு செய்துள்ளது.