tamilnadu

img

தீரர் களப்பால் குப்பு!

நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தை யும் பண்ணையார்களின் கொடுமைகளையும் எதிர்த்து களத்தில் நின்று வீரச்சமர் புரிந்தவர் களப்பால் குப்பு.  தன்னை அடிக்கவந்த பண்ணை யாரின் மணியக்காரர் காதர் பாட்ஷாவின் சாட்டையைப் பறித்து அவரை வெளுத்து வாங்கிய துணிச்சல்காரர். வேதபுரம் ரெங்கசாமி, வெங்கடேச சோழகர் போன்றோரால் துவங்கப்பட்ட விவசாயிகள் சங்கத்தில் இணைந்து தீவிரமாகப் பணியாற்றினார்.  நிலப்பிரபுக்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த சீனிவாசராவ் பங்கேற்ற பல கூட்டங்களை நடத்தி மக்களை அணி திரட்டினார். இதனால் ஆத்திரமுற்ற பண்ணையார்கள் குப்புவைக் கொல்ல கூலிப்படையை ஏவினர். ஆனால் அவர்களையே மனம் மாறச் செய்தார் குப்பு. மகன் மீது தாக்குதல் நடத்தியது பண்ணையார் கூட்டம். மனைவியின் மரணம் கூட குப்புவை பாதிக்கவில்லை. சங்கப் பணியைத் தொடர்ந்தார்.  குன்னியூர் கிராம தலித் மக்கள் மீது நடத்திய குண்டர்களுடன் மோதிய போது கூலிப்படையினர் 2பேர் இறந்ததால் குப்புவுக்கு தூக்குத்தண்டனை கிடைத்தது. ஆயினும் வெறிபிடித்த பண்ணை முதலாளிகள் திருச்சி சிறையில் இருந்த குப்புவுக்கு விஷத்தைக் கொடுத்து கொலை செய்தனர். 37 ஆண்டுகளே வாழ்ந்த குப்பு முன்னுதாரண கம்யூனிஸ்ட்டாக தியாகத்தின் திருவுருமாகத் திகழ்கிறார்.

ஏப்.18 தியாகி களப்பால் குப்பு நினைவு நாள்!

;