tamilnadu

விவசாயிகள் எழுச்சி மோடி அரசுக்கு எச்சரிக்கை

போராட்டம் தீவிரமடையும்: கே.பாலகிருஷ்ணன்

சென்னை, செப். 27- ஒன்றிய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவில்லை என்றால் போராட்டம் மேலும் தீவிர மடையும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன்கூறினார். விவசாயிகளின் வாழ்வா தாரத்தை சீர்குலைக்கும் வகையில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும், மின்சார சட்டமசோதா 2021ஐயும் திரும்பப் பெற வேண்டும், தொழி லாளர் நலச்சட்டங்களை 4 தொகுப்பு களாக திருத்தியதைக் கண்டித்தும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு திங்களன்று (செப். 27) அழைப்பு விடுத்திருந்தது. இந்த போராட்டத்திற்கு சிபிஐ (எம்), சிபிஐ, சிபிஐ(எம்.எல்), , காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சி களும், சிஐடியு, தொமுச, ஏஐடியுசி,  ஐஎன்டியுசி, எச்.எம்.எஸ், ஏஐசி சிடியு, ஏஐயுடியுசி, எம்.எல்.எப்  உள்ளிட்ட தொழிற்சங்கங்க கூட்ட மைப்பு, அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

இதையடுத்து அகில இந்திய அளவில் பல மாநிலங்களில் பொது வேலை நிறுத்தம், சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற்றன. அதன் ஒருபகுதியாக சென்னை அண்ணா சாலை தாராபூர் டவர் அருகே சாலை மறியல் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் இரா.முத்தரசன், விசிக தலை வர் தொல்.திருமாவளவன், சிபிஐ (எம்.எல்) மாநிலச் செயலாளர் என். கே.நடராஜன், தொமுச பொரு ளாளர் நடராஜன், காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் பொன்.கிருஷ்ண மூர்த்தி, மக்கள் நீதி மய்யம் விவ சாயிகள் அணி மாநிலச் செயலாளர் மயில்சாமி, சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, சிபிஐ மாவட்டச் செயலாளர் பா.கருணாநிதி, சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.சந்திரன், செயலாளர் சி.திருவேட்டை, வி. தயானந்தம் (போக்குவரத்து ஊழியர் சம்மேளனம்) உள்ளிட்ட ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்த போராட்டத்தின்போது செய்தியாளர்களை சந்தித்த  கே.பாலகிருஷ்ணன்,“விவசாயிகள் விரோத மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தலைநகர் தில்லியில் விவசாயிகள் கடந்த 10 மாதங்களாக போராடி வரு வதை சுட்டிக்காட்டியதோடு, புதிய வேளாண் சட்டங்களையும், மின்சார சட்ட மசோதாவையும் ஒன்றிய பாஜக  அரசு திரும்பப் பெறவில்லை என்றால்  இந்த போராட்டத்தை மாநிலம் முழுமைக்கும் தீவிரப்படுத்துவோம்” என்று எச்சரிக்கை செய்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறுகையில், “ஒன்றிய அரசின் பிர தமர் மோடியை வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்த போராட்டம் அமைந்துள்ளது” என்றார். தொல்.திருமாவளவன்,“ஒன்றிய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் வலுவான போராட்டம் நடைபெற்று வருகிறது. மோடி அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்” என்றார்.

கிண்டியில்...

ஒன்றிய பாஜக அரசின் மூன்று வேளாண் சட்டங்கள், இலவச மின்சாரத்தைப் பறிக்கும் மின்சார திருத்த மசோதா ஆகியவற்றை ரத்து  செய்யக்கோரி திங்களன்று (செப்.27) நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டத்தின் ஒருபகுதியாக சென்னை கிண்டியில் சாலை மறியல் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் தலைமையில் நடை பெற்ற இந்தப் போராட்டத்தில், சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி. சுகுமாறன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இ.பொன்முடி, செயலாளர் பா.பாலகிருஷ்ணன், பொருளாளர் ஏ.பழனி, சிபிஎம் மாநி லக்குழு உறுப்பினர்கள் க.பீம்ராவ்,  ஆர்.வேல்முருகன், பா.ஜான்சி ராணி, எஸ்.வாலண்டினா, சிபிஐ  தென்சென்னை மாவட்டச் செய லாளர் எஸ்.ஏழுமலை, விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

;