tamilnadu

img

பெரியாறு அணையில்  நீர் திறந்து 130 ஆம் ஆண்டு  பென்னிகுக் சிலைக்கு விவசாயிகள் மாலை அணிவிப்பு  

பெரியாறு அணையில்  நீர் திறந்து 130 ஆம் ஆண்டு  பென்னிகுக் சிலைக்கு விவசாயிகள் மாலை அணிவிப்பு  

தேனி ,அக்.10- பெரியாறு அணையில் நீர் திறந்து 130 ஆம் ஆண்டை முன்னிட்டு பென்னிகுக் சிலைக்கு மாலை அணி வித்தும்,ஆற்றில் பூ தூவியும் விவசாயிகள்  வழிபட்டனர். தேனி, திண்டுக்கல்,மதுரை,சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களின் முக்கிய குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக முல்லை பெரியாறு அணை உள்ளது. இந்த அணையை ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக் பெரும் சிரமங்களுக்கு இடையே கட்டினார். இந்த அணையில் இருந்து 1895 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. முதன்முதலாக தண்ணீர் திறக்கப்பட்ட நாளை விவசாயிகள் நேற்று ஆரவாரமாக கொண்டாடினர். பாலார்பட்டியில் முல்லை பெரியாறு எழுச்சி பேரவை தலைவர் ஆண்டி தலைமையில் பெரியாற்றில் பூக்கள் தூவப்பட்டன. பென்னிகுக்கின் சாதனை குறித்து விளக்கப்பட்டது. கூடலூர் அருகே  லோயர் கேம்பில் பென்னி குவிக் மணிமண்டபத்தில் பல்வேறு விவசாயிகள் சங்க  நிர்வாகிகள்  பென்னிகுக் சிலைக்கு மாலை அணி வித்தனர்.பாலார்பட்டியில் முல்லைப்பெரியாற்றில் பூ தூவி விவசாயிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் .