வனவிலங்குகளின் அச்சுறுத்தலில் இருந்து விவசாயிகள்- விவசாயத்தை பாதுகாத்திடுக
குமாரபுரத்தில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிசுல், அக். 9- வனவிலங்குகளின் அச்சுறுத்தலில் இருந்து விவசாயிகள் மற்றும் விவசா யத்தை பாதுகாக்கக்கோரி குமாரபுரத்தில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வாழ்விடங்களுக்குள் புகுந்து வன விலங்குகள் மக்களை தாக்கி அச்சுறுத்தி வருகின்றது.பயிர்களையும் நாசப்படுத்தி வருகிறது. இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத ஒன்றிய, மாநில அரசுகளை கண்டித்து அகில இந்திய விவசாயத்தொ ழிலாளர் சங்கம் சார்பில் குமரி மாவட்டம் குமாரபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தக்கலை வட்டா ரத்தலைவர் சி.ஜோசப் தலைமை வகித்தார். குமரி மாவட்ட செயலாளர் மலைவிளை பாசி துவக்கி வைத்து பேசினார். கட்டுமான சங்க நிர்வாகி ஜாண் இம்மானுவேல், தக்கலை வட்டார செயலாளர் எஸ்.சிவமோ கன், குமாரபுரம் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் எப்.ஜோசப் ராஜ், விவசாயி கள் சங்கம் மாவட்ட துணை தலைவர் சைமன் சைலஸ் ஆகியோர் பேசினர். சங்க மாவட்ட தலைவர் என்.எஸ்.கண்ணன் நிறை வுரையாற்றினார். இதில், பாம்புகள், குரங்குகள் மற்றும் வனவிலங்குகளை வேன்களில் ஏற்றிச் சென்று வேளிமலை கிராமப் பகுதிகளில் இறக்கிவிடுவதை நிறுத்த வேண்டும். ரப்பர் பால்வடிப்பு தொழிலாளர்களை எரு மைப்பட்டி, மஞ்சகல்லடி, தவரக்குழி, ஆத்துக்குழி பகுதிகளில் புலிகள் அச்சு றுத்துகின்றன. புலிகளின் நடமாட்டத்தால் ரப்பர் விவசாயம் பாதிக்கும் அபாயம் உள்ளது. அதனை கண்டு நடவடிக்கை வேண்டும். பெருஞ்சிலம்பு பகுதி மக்கள் அச்சத் தில் உள்ளனர். வேளிமலை, பெருஞ் சிலம்பு, பன்னிபொத்தை, கரும்பாறை, தவரகுழி, கோழிகிண்டி, எருமைப்பட்டி, வழக்குழி மற்றும் அதன் சுற்றுவட்டா ரப் பகுதிகளில் குரங்குகள், காட்டுப்பன்றிக ளால் விவசாயம் அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும். விவசாயிகளையும் விவசாயத்தையும் வனவிலங்குகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும். விலங்குகளால் சேதப்படும் விவ சாயத்திற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
