tamilnadu

img

விடுகதை - மா.முத்துசாமி. மு.வாடிப்பட்டி

விடுகதை

1.விலைமதிப்பிட முடியாத பால் எது? 2.குடிக்க முடியாத பால் எது? 3.நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள   பால் 4.நாமறிந்த மொழிப்பால் எது?  5.இது இருந்தால் தோல்வி   நிச்சயம். அது எது? 6.எரித்த பின் மிஞ்சும் பல் எது? 7. கூட்டமாக இருக்கும் பல் எது? 8.செயல்பாட்டை சீர்குழைய  செய்யும் பல் எது ?  9.அழுகையில் இது ஒரு வகைப்பல்  . அது எது?  10.பூலான்தேவி என்ற பெயரைக்   கேட்டதும் இந்தப் பல் ஞாபகத்திற்கு வரும். அது எது?  விடைகள்: 1. தாய்ப்பால் 2. மனப்பால் 3. சீம்பால். 4. தமிழ்ப்பால் …………. 5. சோம்பல். 6. சாம்பல் 7. கும்பல் 8. சொதப்பல் 9. விசும்பல். 10. சம்பல்