tamilnadu

img

லயன் சங்கம் நடத்திய கண் சிகிச்சை முகாம்

லயன் சங்கம் நடத்திய  கண் சிகிச்சை முகாம்

கும்பகோணம், செப். 13-  நாச்சியார்கோவில் லயன் சங்கம், கும்பகோணம் கோஸ்ட் லயன் சங்கம், சிட்டி யூனியன் வங்கி, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, தஞ்சை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் இணைந்து தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தின.  நாச்சியார்கோவிலைச் சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து 260 நபர்கள் சிகிச்சை பெற்றனர். அதில் 74 நபர்களுக்கு, ஐ.ஓ.எல். லென்ஸ் பொருத்தி அறுவை சிகிச்சை செய்ய தேர்வு செய்யப்பட்டு, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். முகாமில், பயனாளர்களுக்கு அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் துர்கா தேவி, ரம்யா ஆகியோர் சிகிச்சை அளித்தனர். இதனை ஒருங்கிணைப்பாளர் காசிநாதன், நாச்சியார்கோவில் சங்கத் தலைவர் முத்து, செயலாளர் சரவணன், பொருளாளர் பக்கிரிசாமி, கும்பகோணம் கோஸ்ட் லயன் சங்க தலைவர் கே.எஸ் பாலசுப்ரமணியம், செயலாளர் என். ராஜாராமன், பொருளாளர் தி.ஜோதிராம் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.