tamilnadu

img

ரயில் விபத்தை கூட லாப வெறிக்கு பயன்படுத்தும் தனியார் விமான நிறுவனங்கள்!

கொடூரமான ரயில் விபத்தை கூட லாப வெறிக்கு பயன்படுத்தும் தனியார் விமான நிறுவன கட்டண கொள்ளைக்கு யார் பொறுப்பு என சு.வெங்கடேசன் எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒடிசாவில் வெள்ளியன்று நிகழ்ந்த கோரமான ரயில் விபத்தில் தற்போது வரை 275 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த ரயில் விபத்தால் ஒட்டுமொத்த நாடும் பெருந்துயரில் இருக்கும் நேரத்தில்,எரிகிற வீட்டில் கிடைத்தவரை லாபம் என்கிற சொலவடைக்கேற்ப புவனேஸ்வர் மற்றும் கொல்கத்தாவில் இருந்து தென்னிந்திய நகரங்களுக்கு செல்லக் கூடிய விமான கட்டணங்களை தனியார் விமான நிறுவனங்கள் பல மடங்கு உயர்த்திவிட்டன.

ஒட்டுமொத்த உலகமும் இந்த துயரத்தில் இருக்க, தனியார் விமான நிறுவனங்கள் மட்டும் போட்டி போட்டுக் கொண்டு கட்டண கொள்ளையில் ஈடுபட்டுள்ளன. தில்லி- புவனேஸ்வர் இடையேயான விமான கட்டணம் முன்பு ரூ.6000-ரூ.7000 எனில் இப்போது அதிகபட்சம் ரூ.15,000 வரை பெறப்படுகிறது. கொல்கத்தாவில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு கட்டணம் ரூ.5000-ரூ.6000 எனில் இப்போது அதிகபட்சமாக ரூ.14,000 வரை வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பதிவில்,

அரசு விமான நிறுவனமான ஏர் இந்தியாவை டாடாவுக்கு விற்ற மோடி அரசே! கொடூரமான ரயில் விபத்தை கூட லாப வெறிக்கு பயன்படுத்தும் தனியார் விமான நிறுவன கொள்ளைக்கு யார் பொறுப்பு? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒடிசாவுக்கு டிக்கெட் விலை 6 மடங்கு முதல் 20 மடங்கு வரை. 4000 ரூபா டிக்கெட் 24000 முதல் 80000 ரூபாய் வரை அரசு விமானம் இருந்தால் "வந்தே பாரத்" என்று கருணை காண்பிக்கலாம் அல்லவா! கருணை இல்லா அரசே உறவினர் பயணக் கட்டணத்தை ஒன்றிய அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

;