இபிஎப் பென்சனர்களுக்கு குறைந்தபட்ச பென்ஷன் ரூ 9,000 வழங்க வேண்டும்
கோவை, ஆகஸ்ட் 31- ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) ஓய்வூதியதாரர்கள் நலச் சங்க கோவை மண்டல மாநாடு ஞாயிற்றுக்கிழமை அன்று (ஆகஸ்ட் 31) கோவையில் மாவட்ட தலைவர் பி.என். பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் இபிஎப் பென்ச னர்களுக்கு குறைந்தபட்ச பென்ஷன் ரூ 9,000 பஞ்சபடியுடன் வழங்க வேண்டும். இபிஎஃப் பென்சனர் களுக்கு இஎஸ்ஐ திட்டத்தின் மூலம் மருத்துவ திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். 1-9-2017 முன்பு பின்பு என பாகுபாடு காட்டாமல் தகுதியுள்ள அனைவருக்கும் முழு சம்பளத்திற்கு உரிய பென்ஷன் வழங்கிட வேண்டும். மூத்த குடிமக்களுக்கு பறிக்கப்பட்ட ரயில் கட்டண சலுகை மீண்டும் உட னடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்ற ஒன்றிய அரசை வலியுறுத்தியும், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வழங்குவது போன்று மூத்த குடிமக்களுக்கு சமூக நிதி பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ 2,000 போல் தமிழகத்திலும் வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தியம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானங்களை அமல்படுத்த தமிழக முழுவதும் மண்டல மாநாடு களை நடத்துவது. அக்டோபர் மாதத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் நவம்பரில் ஆளுநர் மாளிகை யை முற்றுகையிடுவது, டிசம்பர் முதல் வாரத்தில் தில்லியில் பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து அகில இந்திய தலைவர்கள் பங்கேற்கும் கருத்துரங்கம் டிசம்பர் 10 அன்று நடத்துவது, டிசம்பர் 11 அன்று நாடாளுமன்றம் முன்பு தர்ணா போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் இபிஎஃப் ஓய்வூதியதாரர்கள் நலச்சங்க மாநில தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, மாநிலச் செயலாளர் கே.பி.பாபு, அகில இந்திய செயற்குழு உறுப்பினர் ஏ.ஆர்.துரைசாமி, சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் சி.தங்கவேல், இன்ஜினியர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.பி.சுப்பிரமணியன் ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக கோவை மாவட்ட பொருளாளர் ஆர்.எஸ்.மணி நன்றி கூறி னார். மாநாட்டில் கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களை சார்ந்த சுமார்150 ஒய்வூதியர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.