tamilnadu

எண்ணூர் அனல் மின் நிலையப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்! 9 புலம்பெயர் தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ. 25 லட்சம் கூடுதல் இழப்பீடு வழங்குக!

எண்ணூர் அனல் மின் நிலையப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்! 9 புலம்பெயர் தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ. 25 லட்சம் கூடுதல் இழப்பீடு வழங்குக!

சென்னை, அக். 2 - எண்ணூர் அனல் மின் நிலை யத்தில் பலியான வட மாநிலத் தொழிலாளர்கள் 9 பேரின் குடும்பங்களுக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க  வேண்டும்; பாதுகாப்பு நடைமுறை களை உறுதியாக பின்பற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்ப தாவது: அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கும் உயிர்ப்பலி திருவள்ளூர் மாவட்டம், பொன் னேரி வட்டம், மீஞ்சூரை அடுத்துள்ள வயலூர் ஊராட்சியில் எண்ணூர் அனல்மின் நிலைய கட்டுமானப் பணியின் போது சாரம் சரிந்து, பணி செய்து கொண்டிருந்த 9 வட மாநில தொழிலாளர்கள் உயிரிழந்த சம்ப வம் பெரும் அதிர்ச்சியையும், வேத னையும் அளிக்கிறது. உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங் களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைந்துள்ள பகுதியில் 2X660  மெகா வாட் திறன் கொண்ட அனல் மின் நிலையம் அமைக்கப் பட்டு வருகின்றது. பாரத் ஹெவி எலக்ட்ரிக்ஸ் நிறுவனத்திற்கு இந்த  கட்டுமானப் பணிகளை முழுமை யாக முடித்துக் கொடுப்பதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்தம் அளித்துள்ளது.  2 மாதத்திற்குள்  2-ஆவது விபத்து இந்த தொழிற்சாலையில் அடுத் தடுத்து கட்டுமானப் பணிகளின் போது விபத்து நடைபெறுவதும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மர ணத்தை எதிர்கொள்வதும் அதி கரித்துள்ளது. கடந்த இரண்டு மாதத் தில் மீஞ்சூர் பகுதியில் நடந்த இர ண்டாவது விபத்தாகும் இது. கடந்த விபத்தின் போது ஒரு தொழிலாளர் உயிரிழந்தார். தற்போது 150 அடி உயரத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் சாரம் சரிந்து 9 தொழிலாளர்கள் உயி ரிழந்துள்ளனர்.  நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறை களை தமிழ்நாடு மின்சார வாரிய மும், ஒப்பந்தம் எடுத்த பெல் நிறுவனமும் இணைந்து மேற் கொண்டிருக்க வேண்டும். அதை செய்யாததன் விளைவே இந்த உயி ரிழப்புகளுக்கு முக்கிய காரணம் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது. புலம்பெயர் தொழிலாளர்களிடம் நடக்கும் உழைப்புச்சுரண்டல் குறைவான கூலிக்கும், கடுமை யாக வேலைவாங்கும் முறைக்கும் புலம் பெயர் தொழிலாளர்களை பயன்படுத்தும் கொடுமைகளுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அவர்களுக்கு சட்டப்படி யான பாதுகாப்பு, வேலை நேரம், சட்டப்படியான கூலி உள்ளிட்ட வைகள் வழங்குவதையும், குறிப் பாக, புலம் பெயர் தொழிலாளர் சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படு வதையும் தமிழ்நாடு அரசு உறுதி செய்திட வேண்டும். மனித உழைப்பை, உயிரை  மதிக்காத நிறுவனங்களுக்கான ஒப்பந்த உரிமைகளை ரத்து செய் வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது. கூடுதல் இழப்பீடு,  உயர்தர சிகிச்சை வழங்குக! மேலும், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு ரூ. 10 லட்சமும், ஒன்றிய அரசு  ரூ.2 லட்சமும் நிவாரணம் அளித்துள் ளன. உயிரிழந்தவர்கள் அனை வரும் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர்கள் என்பதால் ஒப்பந்தம் எடுத்துள்ள பெல் நிறுவனத்திட மிருந்து உயிரிழந்த தொழிலாளர் களின் குடும்பத்திற்கு கூடுதலாக ரூ.25 லட்சம் இழப்பீடும், படுகாய முற்று சிகிச்சையில் இருக்கும் தொழிலாளர்களுக்கு உயர் தர  மருத்துவ சிகிச்சையும், பாதிப்புக் கேற்ற இழப்பீடும் வழங்கிட தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்து கிறது. இவ்வாறு அறிக்கையில் பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.