tamilnadu

50 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் அஞ்சலகத்தை காலி செய்! மல்லுக்கட்டும் வீட்டுவசதி வாரியம் தக்க வைக்க மறுக்கும் அஞ்சலக அதிகாரிகள்

மதுரை, அக்.20- மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு உள்ளது. வாரியத்திற்கு சொந்தமான கட்டடத்தில் கடந்த 50 ஆண்டுகளாக ஞான ஒளிவுபுரம் துணை அஞ்சலகம் செயல் பட்டுவருகிறது.  ஆரப்பாளையம் பேருந்து நிலையம் தொடங்குவதற்கு முன்பே இந்த இடத்தில் அஞ்சலகம் செயல்படுவதால் அனைவருக்கும் அஞ்சலம் செயல்படுவது தெரியும். தேசிய மயமாக்கப்பட்ட அஞ்சல் துறை வங்கியும் இதில் செயல்படு கிறது. ஆட்டோ ஓட்டுநர்கள் உட்பட சுமார் ஆயிரம் பேர்இங்கு சேமிப்புக் கணக்கு வைத்துள்ளனர். ஏராளமா னோர் முதியோர் உத வித்தொகையை இந்த தபால்நிலையம் மூலம் பெறுகின்றனர். ஆரப்பாளையம் பேருந்து நிலையம் பிரதானமாக உள்ளதால் வெளியூர்காரர்களும் இங்கு சேமிப்புக் கணக்கு வைத்துள்ளனர். பதிவுத் தபால், விரைவுத் தபால் பணிகள் இன்றைக்கும் நடந்து வருகிறது. இந்த அஞ்சலகத்தை பூட்டிவிட்டால் ஆரப்பாளையத்தை சுற்றியுள்ளவர்க ளும், வெளியூரிலிருந்து வருபவர்களும் இங்கிருந்து 1.5 கி.மீ பயணம் செய்து அரசரடி தபால்நிலையத்திற்கு சென்றுதான் பதிவு தபால், விரைவுத் தபால்கள் அனுப்ப முடியும். இந்தச் சூழலில், அஞ்சல்துறை உயர்த்தப்பட்ட வாடகை நிலுவைத் தொகையை தரவில்லை என்ற அற்ப காரணத்தைக் கூறி அஞ்சலகத்தை காலி செய்துவிட்டு அந்த கட்ட டத்தை ‘லாபநோக்கில்’ கூடுதல் வாட கைக்கு விட வீட்டுவசதி வாரியம் யோசிப்பதாகக் கூறும் அப்பகுதி மக்கள், அரசின் கட்டுப்பாட்டில் அஞ்சல் சேவை இருக்கவேண்டுமென ஊழியர்க ளும், மக்களும் போராடி வரும் நிலையில், அஞ்சல்துறையில் உள்ள சில அதி காரிகளே இந்த அஞ்சலகத்தை மூட்டை கட்டி அரசரடி அஞ்சலகத்தோடு இணைத்து விடலாம் எனக்கூறுவதுதான் வேதனை என்கின்றனர். இதுகுறித்து சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் என்.நன்மாறன் கூறியதா வது:- ஆரப்பாளையம் தபால் நிலையம் மிகவும் பழமையானது நான் சிறு வயதில் இருக்கும்போது இருந்தே இங்கு செயல்பட்டு வருகிறது ஆரப் பாளையம் கிராஸ் ரோடு, மேலப் பொன்னகரம், ஆரப்பாளையம் பகுதி மக்கள் இந்த அஞ்சல் நிலையத்தை அதிக மாகப் பயன்படுத்தி வருகிறார்கள். விரைவுத் தபால், பதிவுத்தபால் சேவை தொடர்ந்து நடைபெறுகிறது. ஆயிரக் கணக்கா னோர் வங்கிக்கணக்கு வைத்துள்ளனர். முதியோர் உதவித் தொகையை அதிகமானோர் தபால்நிலையம் மூலம் வாங்கிச் செல்கின்றனர். இந்த நிலையில் இந்த தபால் நிலையத்தை அஞ்சல்துறை அரசரடியில் உள்ள தபால் நிலையத்துடன் இணைப்பதை ஏற்கமுடியாது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த முயற்சியை தடுக்க வேண்டுமென்றார்.                                                                    சிபிஎம் கையெழுத்து இயக்கம்
அஞ்சலகத்தை வரும் அக்டோ பர் 31-ஆம் தேதிக்குள் காலிசெய்ய வேண்டுமென அறிவிப்பு வெளியாகி யுள்ள நிலையில் சிபிஎம் சார்பில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் என்.நன்மாறன் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

;