tamilnadu

img

பழைய ஓய்வூதிய திட்டம்தான் வேண்டும்

சென்னை, டிச. 3- புதிய ஓய்வூதிய திட்டத்தினால் ஏற்படும் ஆபத்து குறித்த கருத்த ரங்கம் சென்னையில் சனிக்கிழமை யன்று (டிச.3) வருமான வரி பணி யாளர்கள் கூட்டமைப்பு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வட்டத்தின் சார் பில் நடைபெற்றது. “புதிய ஓய்வூதிய திட்டத்தின் ஆபத்து” என்ற தலைப்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வணிக  வரி வளாகத்தில்  நடைபெற்ற கருத்த ரங்கிற்கு கூட்டமைப்பின் தலைவர் ஆர்.ஆர்.சியாம்நாத் தலைமை தாங்கினார். பொருளாதார நிபுணர் பேராசி ரியர் வெங்கடேஷ் பி.ஆத்ரேயா, முன்னாள் தலைவர் எம்.சந்தா னம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வட்டத்தின் பொதுச் செயலாளர் ஜி. கண்ணன், மத்திய அரசு அதிகாரி கள் கூட்டமைப்பின் பொதுச் செய லாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் பேசினர்.  

புதிய ஓய்வூதிய திட்டத் தின் பாதகமான அம்சங்களை எடுத்துரைத்த தலைவர்கள் பழைய   ஓய்வூதிய திட்டத்தின் நன்மைகளை விளக்கினர்.  இதுகுறித்து சங்கத்தின் பொதுச்  செயலாளர் எம்.எஸ்.வெங்கடேசன் கூறுகையில், ஒன்றிய மற்றும் பல்  வேறு மாநில அரசுகளில் பணிய மர்த்தப்பட்ட அதிகாரிகள் புதிய ஓய்  வூதியத் திட்டம் அல்லது தேசிய  ஓய்வூதிய முறையின் கீழ் கொண்டு  வரப்பட்டதற்கு எதிராக மத்திய அரசு  ஊழியர்கள் கூட்டமைப்பு, அகில  இந்திய மாநில அரசு ஊழியர் சம்  மேளனம் தர்ணா, பேரணி, மக்க ளவை நோக்கி ஊர்வலம், வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு வடி வங்களில் போராட்டங்களை நடத்தி வருகிறோம். மேலும் பல மாநாடு கள், கூட்டங்கள், சிறப்பு கருத்த ரங்குகளையும் நடத்தி வருகி றோம். தற்போது ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் மாநி லங்கள் தங்கள் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தப் போவதாக அறி வித்துள்ளன. இந்த பின்னணியில் அனைத்து மாநிலங்களிலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி வரும் 8ஆம் தேதி புதுதில்லியில் உள்ள தல்கடோரா ஸ்டேடியத்தில் பல்வேறு மாநில மற்றும் மத்திய பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு நடைபெற உள்ளது. அதையொட்டி இந்த கருத்தரங்கம் நடைபெறு கிறது என்றார்.