போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவாக மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு, ஆக. 26- போராடிவரும் போக் குவரத்து ஊழியர்களுக்கு ஆதவாக சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். தமிழ்நாடு அரசு போக் குவரத்து ஊழியர்கள் மற் றும் ஓய்வூதியர் அமைப்பின் சார்பில் ஊதிய ஒப்பந்தம், ஓய்வு கால பணப் பலன் மற்றும் நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8 நாட்களுக்கு மேலாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஈரோடு மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மண்டலச் செயலாளர் சி.ஜோதிமணி தலைமை வகித்தார். மாநில நிர்வாகியும், கிளை செயலாளருமான பி.ஸ்ரீதேவி சிறப்புரையாற்றினார். நகரக் கோட்ட செயலாளர் தமிழரசன் நன்றி கூறினார். இதேபோன்று போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை வாழ்த்தி சிஐடியு ஈரோடு மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் சார்பில் ரூ.2000 நிதி அளிக்கப்பட்டது. பொதுச் செயலாளர் கெ.ரவிச்சந்திரன், இணைச்செயலாளர் வீ.ராஜேந்திரன் மற்றும் பொன்.பாரதி ஆகியோர் ஆதரவு தெரிவித்து நிதி வழங்கினர்.