tamilnadu

img

மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில மாநாடு வெண்மணி தியாகிகள் நினைவு ஜோதி பயணம்

மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில மாநாடு வெண்மணி தியாகிகள் நினைவு ஜோதி பயணம்

நாகப்பட்டினம், ஆக.6 - தமிழ்நாடு மின்வாரிய மத்திய அமைப்பு மாநில மாநாடு கடலூரில் ஆகஸ்ட் 8,9,10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதை ஒட்டி, வெண்மணி தியாகிகள் நினைவு ஜோதி பயண நிகழ்ச்சி புதன்கிழமை வெண் மணி தியாகிகள் இல்லத்தில் நடைபெற்றது. கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. நாகைமாலி நினைவு ஜோதியை எடுத்து கொடுக்க மின் ஊழியர் மத்திய அமைப்பின் மத்தியக்குழு துணை தலைவர் எஸ்.ரெங்க ராஜன் பெற்றுக் கொண்டு, ஜோதி பயணம் துவங்கியது. இதில் சிஐடியு நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.ராஜேந்திரன், திருவா ரூர் மாவட்டச் செயலாளர் ஆர்.மாலதி, தஞ்சா வூர் மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பி.மாரி யப்பன், நாகை மாவட்டத் தலைவர் ஏ.சிவன ருட்செல்வன், மாவட்டப் பொருளாளர் எம்.வெற்றிவேல், மாநிலச் செயலாளர் எஸ்.ராஜாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.