tamilnadu

img

கேங்மேன் பணியாளர்களுக்கு ஆதரவாக மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்

கேங்மேன் பணியாளர்களுக்கு ஆதரவாக  மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர், செப். 11- திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி பாலம்மாள் காலனி பகுதியில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வட்டக்கிளை தலை வர் ஜெயபால் தலைமையில் நடை பெற்றது. இதில் மாநில செயலாளர் எஸ்.ஜோதி துவக்கி வைத்தும் மாநில துணை தலைவர் எம்.கோவிந்தராஜ் நிறைவு செய்தும் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் வாணியம்பாடி கோட்டத்திற்கு வேறு திட்டத்திலிருந்து 14 கேங்மேன் பணியாளர்கள் வந்ததும் 8 கேங்மேன் பணியாளர்களை மட்டும் பணிவிடுவிப்பு செய்து மற்ற பணியாளர் களை பணிவிடுவிப்பு செய்யாத வாணியம்  பாடி செயற்பொறியாளர் மீது தமிழக அரசு மற்றும் மின்சார வாரியம் நட வடிக்கை எடுக்க வேண்டும், கேங்மேன் பணி யாளர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில இணை செயலாளர் ஏங்கல்ஸ், திட்டக்கிளை செயலாளர் சந்திரசேகரன், சிஐடியு கன்வீனர் சி.கேசவன் மற்றும் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் நிர்வாகி கள் உட்பட பலர் பங்கேற்றனர். முடிவில் திட்டக்கிளை பொருளாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.