tamilnadu

img

கேங்மேன் மீது தாக்குதல் பணி பாதுகாப்பு கோரி மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கேங்மேன் மீது தாக்குதல் பணி பாதுகாப்பு கோரி மின்வாரிய  ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, அக். 26-  திருவெறும்பூர் அருகே, வேங்கூர் கிராமத்தில் பணி செய்யச் சென்ற மின்வாரிய கேங்மேன் தமிழ்வாணனை சிறைபிடித்து, அவருடைய வாகனத்தையும் கைப்பற்றி, அவரை மீட்கச் சென்ற மின் ஊழியர்கள் மீது அப்பகுதி மக்கள் தாக்குதல் நடத்தினர்.  இதை கண்டித்தும், மின்வாரிய ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் (சி.ஐ.டி.யு.) திருச்சி பெருநகர வட்டக்கிளை சார்பில் திருவெறும்பூரில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாநில துணைத் தலைவர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். திருவெறும்பூர் பகுதி போர்மேன் கற்குவேல் முன்னிலை வகித்தார். திருச்சி வட்டத் தலைவர் நடராஜன், வட்டச் செயலாளர் பழனியாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.