tamilnadu

img

நகர்ப்புற உள்ளாட்சி தலைமை பதவிகளுக்கு இன்று தேர்தல்

மதுரை மாநகராட்சி துணை மேயர் தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் டி.நாகராஜனை செய்தியாளர்களிடையே அறிமுகப்படுத்தி வாழ்த்து தெரிவித்தார் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.வசந்தன், ஜா.நரசிம்மன், அ.ரமேஷ் ஆகியோர் உடன் உள்ளனர்.

சிபிஎம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்

சென்னை, மார்ச் 3 - வெள்ளியன்று நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களில் தலைமைப் பதவிகளுக்கு நடைபெற உள்ள தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.

மாநகராட்சி துணை மேயர்
1.  மதுரை மாநகராட்சி     -    டி.நாகராஜன்

நகராட்சி தலைவர்
1.திருமுருகன்பூண்டி (திருப்பூர்)    -       பி.சுப்பிரமணியம்     
2. கொல்லங்கோடு (கன்னியாகுமரி)   -         ஆர்.லலிதா நகராட்சி துணைத் தலைவர்
1. திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) -          எஸ்.ராமலோக ஈஸ்வரி
2.சிதம்பரம் (கடலூர்) -          ம.முத்து (எ) முத்துகுமரன்
3. பழனி (திண்டுக்கல்)  -       கே.கந்தசாமி பேரூராட்சி தலைவர்
1.  பெரியநாயக்கன்பாளையம் (கோவை) -  என்.சிவராஜன்
2.வீரவநல்லூர்(திருநெல்வேலி) -  பெ.கீதா
3. அந்தியூர் (ஈரோடு)     -     எஸ்.கீதா
பேரூராட்சி துணைத் தலைவர்
1.  வடமதுரை (திண்டுக்கல்)  -    எம். மலைச்சாமி
2. தொட்டியம் (திருச்சி)   -    ரா.கலைச்செல்வி
3. பண்ணைப்புரம் (தேனி)   -   எஸ்.சுருளிவேல்
4. கீரனூர் (புதுக்கோட்டை) -  எம்.மகாலெட்சுமி
5. தளி (திருப்பூர்)        -    ஜி.செல்வன்
6. தேவர்சோலை (நீலகிரி) -   எ.வி.ஜோஸ்
 

சென்னை, மார்ச் 3 - தமிழக நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களுக் கான மேயர், துணை மேயர்; நகராட்சித் தலைவர்,  துணைத் தலைவர்; பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் மார்ச்  4 வெள்ளியன்று நடைபெறுகிறது. இத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் போட்டியிடும் பதவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி திமுக,  மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் சென்னை, மதுரை உள்பட 20 மாநகராட்சி மேயர் பதவிகள் திமுகவிற்கும் கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவி காங்கிரசுக்கும் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன. மதுரை மாநகராட்சி துணைமேயர் பதவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவை உள்ளிட்ட பதவிகள் ஒதுக்கீடு விபரம் வருமாறு:

இந்திய தேசிய காங்கிரஸ்

மாநகராட்சி மேயர்: 1. கும்பகோணம் - தஞ்சாவூர் மாவட்டம்.
மாநகராட்சி துணை மேயர்: 1. சேலம் - சேலம் மாவட்டம்; 2. காஞ்சிபுரம் - காஞ்சிபுரம் மாவட்டம்.
நகராட்சித் தலைவர்: 1. தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம்; 2. தேனி - தேனி மாவட்டம்; 3. காங்கேயம் - திருப்பூர் மாவட்டம்; 4. சுரண்டை - தென்காசி மாவட்டம்;  5. கருமத்தம்பட்டி 
- கோவை மாவட்டம்; 6. கோபிசெட்டிபாளையம் - ஈரோடு மாவட்டம்; 
நகராட்சி துணைத் தலைவர் : 1. கூடலூர் - 
நீலகிரி மாவட்டம்; 2. ஆரணி - திருவண்ணாமலை மாவட்டம்; 3. நரசிங்கபுரம் - சேலம் மாவட்டம்; 4. காரமடை - கோவை மாவட்டம்; 5. குடியாத்தம் - வேலூர் மாவட்டம்; 6. திருவேற்காடு - திருவள்ளூர் மாவட்டம்; 7. குன்றத்தூர் - காஞ்சிபுரம் மாவட்டம்; 8. தாராபுரம் - திருப்பூர் மாவட்டம்; 9. உசிலம்பட்டி - மதுரை மாவட்டம்;
பேரூராட்சி தலைவர் : 1. மங்களம்பேட்டை - கடலூர் மாவட்டம்; 2. சின்னசேலம் - கள்ளக்குறிச்சி மாவட்டம்; 3. வடுகப்பட்டி - தேனி மாவட்டம்; 4. பூலாம்பட்டி - சேலம் மாவட்டம்; 5. பிக்கட்டி - நீலகிரி மாவட்டம்; 6. பேரையூர் - மதுரை 
மாவட்டம்; 7. பட்டிவீரன்பட்டி - திண்டுக்கல் மாவட்டம்; 8. திருபெரும்புதூர் - காஞ்சிபுரம் மாவட்டம்; 
பேரூராட்சி துணைத் தலைவர்: 1. சங்கராபுரம் - கள்ளக்குறிச்சி மாவட்டம்; 2. ஜகதால - 
நீலகிரி மாவட்டம்; 3. கீடிநகுந்தா - நீலகிரி மாவட்டம்; 4. மூலைக்கரைப்பட்டி - திருநெல்வேலி 
மாவட்டம்; 5. கன்னிவாடி - திருப்பூர் மாவட்டம்; 6. நங்கவல்லி - சேலம் மாவட்டம்; 7. கருப்பூர் - சேலம் மாவட்டம்; 8. டி.என்.பாளையம் - ஈரோடு மாவட்டம்; 9. நாட்றாம்பள்ளி - திருப்பத்தூர் மாவட்டம்; 10. உடையார்பாளையம் - அரியலூர் மாவட்டம்; 11. கணியூர் - திருப்பூர் மாவட்டம்;
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

மாநகராட்சி துணை மேயர்: 1. மதுரை - மதுரை மாவட்டம்; 
நகராட்சி தலைவர்: 1. திருமுருகன்பூண்டி - திருப்பூர் மாவட்டம்; 2. கொல்லங்கோடு - கன்னியாகுமரி மாவட்டம்; 
நகராட்சி துணைத் தலைவர்: 1. திருத்துறைப்பூண்டி - திருவாரூர் மாவட்டம்; 2. சிதம்பரம் - கடலூர் மாவட்டம்; 3. பழனி - திண்டுக்கல் மாவட்டம்; 
பேரூராட்சி தலைவர்: 1. பெரியநாயக்கன் பாளையம் - கோவை மாவட்டம்; 
2. வீரவநல்லூர் - திருநெல்வேலி மாவட்டம்; 3. அந்தியூர் - ஈரோடு மாவட்டம்;
பேரூராட்சி துணைத் தலைவர்: 1. வடமதுரை - திண்டுக்கல் மாவட்டம்; 2. தொட்டியம் - திருச்சி மாவட்டம்; 3. பண்ணைப்புரம் - தேனி மாவட்டம்; 4. கீரனூர் - புதுக்கோட்டை மாவட்டம்; 5. தளி - திருப்பூர் மாவட்டம்; 6. தேவர்சோலை - நீலகிரி மாவட்டம்;
 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

மாநகராட்சி துணை மேயர்: 1. திருப்பூர் - திருப்பூர் மாவட்டம்.
நகராட்சி தலைவர்: 1. கூத்தாநல்லூர் - திருவாரூர் மாவட்டம்.
நகராட்சி துணைத் தலைவர்: 1. பவானி - ஈரோடு மாவட்டம்; 2. புளியங்குடி - தென்காசி மாவட்டம்; 
3. அதிராம்பட்டினம் - தஞ்சாவூர் மாவட்டம்; 4. போடிநாயக்கனூர் - தேனி மாவட்டம்; 
பேரூராட்சி தலைவர்: 1. வத்திராயிருப்பு - விருதுநகர் மாவட்டம்;  2. பூதப்பாண்டி - கன்னியாகுமரி மாவட்டம்; 3. சிவகிரி - தென்காசி 
மாவட்டம்; 4. புலியூர் - கரூர் மாவட்டம்; 
பேரூராட்சி துணைத் தலைவர்: 1. கூத்தைப்பார் - 
திருச்சி மாவட்டம்; 2. ஊத்துக்குளி - திருப்பூர் மாவட்டம்; 3. மேலசொக்கநாதபுரம் - தேனி மாவட்டம்; 4. கீரமங்கலம் - புதுக்கோட்டை மாவட்டம்; 5. சேத்தூர் - விருதுநகர் மாவட்டம்; 6. ஜம்பை - ஈரோடு மாவட்டம்;
 

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம்

மாநகராட்சி துணை மேயர்: 1. ஆவடி - திருவள்ளூர் மாவட்டம்.
நகராட்சி தலைவர்: 1. மாங்காடு - காஞ்சிபுரம் மாவட்டம்.
நகராட்சி துணைத் தலைவர்: 1. பரமக்குடி - இராமநாதபுரம் மாவட்டம்; 2. கோவில்பட்டி - தூத்துக்குடி மாவட்டம்; 3. குளித்தலை - கரூர் மாவட்டம்;
பேரூராட்சி தலைவர்: 1. திருவேங்கடம் - தென்காசி மாவட்டம்; 2. ஆடுதுறை - தஞ்சாவூர் மாவட்டம்; 3. சென்னசமுத்திரம் - ஈரோடு மாவட்டம்;

பேரூராட்சி துணைத் தலைவர்: 1. பாளையம் - திண்டுக்கல் மாவட்டம்; 2. அவல்பூந்துறை - ஈரோடு மாவட்டம்; 3. அரச்சலூர் - ஈரோடு மாவட்டம்; 

விடுதலை சிறுத்தைகள் கட்சி

மாநகராட்சி துணை மேயர்: 1. கடலூர் - கடலூர் மாவட்டம்.
நகராட்சி தலைவர்:  1. ஜெயங்கொண்டம் - அரிய
லூர் மாவட்டம்; 2. நெல்லிக்
குப்பம் - கடலூர் மாவட்டம்; 
நகராட்சி துணைத் தலைவர்: 1. திண்டிவனம் - விழுப்புரம் மாவட்டம்; 2. பெரியகுளம் - தேனி 
மாவட்டம்; 3. இராணிப்
பேட்டை - இராணிப்பேட்டை மாவட்டம்; 
பேரூராட்சி தலைவர்: 1. பெண்ணாடம் - கடலூர் 
மாவட்டம்; 2. காடை
யாம்பட்டி - சேலம் மாவட்டம்; 3. பொ.மல்லாபுரம் - தருமபுரி மாவட்டம்;
பேரூராட்சி துணைத் தலைவர்: 1. கடத்தூர் - தரும
புரி மாவட்டம்; 2. திருப்போரூர் - செங்கல்பட்டு மாவட்டம்; 3. புவனகிரி - கடலூர் மாவட்டம்; 4. கொளத்தூர் - சேலம் மாவட்டம்; 5. வேப்பத்தூர் - தஞ்சாவூர் மாவட்டம்; 6. அனுமந்தன்பட்டி - தேனி மாவட்டம்; 7. ஓவேலி - நீலகிரி மாவட்டம்;
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.