சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை முதியவருக்கு 20 ஆண்டு சிறை
கோவை, செப்.19- கோவை பேரூர் பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு 8 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குப்பு சாமி (62) என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை யும், ரூ. 42,000 அபராதமும் விதித்து கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையை சிறப்பாக மேற்கொண்ட புலன் விசாரணை அதிகாரி, சாட்சிகளை நீதிமன்றத்தில் திறம்பட ஆஜர்படுத்திய நீதிமன்ற சிறப்பு உதவி ஆய்வா ளர் உஷா மற்றும் பெண் காவலர் பவித்ரா ஆகியோரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் வெகுவாகப் பாராட்டினார்.
குடிநீர் கேட்டு சாலை மறியல்
ஈரோடு, செப்.19- பவானிசாகர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பனை யம்பள்ளி ஊராட்சியில் கடந்த 5 நாட்களாக குடிநீர் விநியோ கம் செய்யப்படவில்லை என கிராம மக்கள் புகார் தெரி வித்தனர். ஆனால், ஊராட்சி நிர்வாகம் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, 100க்கும் மேற்பட்ட பெண்கள் வியாழனன்று காலிக்குடங்களுடன் பவானிசாகர் – பனையம்பள்ளி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட னர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி, பொது மக்களை சமாதானப்படுத்தி ஓரிரு நாளில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதைய டுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
கொடநாடு வழக்கு ஒத்திவைப்பு
உதகை, செப்.19- நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு பங்களாவில் 2017 ஆம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடை பெற்றது. வழக்கு விசா ரணை உதகையிலுள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத் தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு வெள்ளியன்று விசாரணைக்கு வந்த நிலை யில், குற்றம் சாட்டப்பட் டோர் யாரும் ஆஜராகா வில்லை. இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை அக்.10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட் டார்.
போகாத ஊரும், போலீசாரின் அபராதமும்
சேலம், செப்.19- வாழப்பாடி அருகே உள்ள முருகன் என்பவர் இருசக்கர வாகனத்தில் தலைக் கவசம் அணியாமல் சென்றதாக காரமடை பகுதியில் பொய் வழக்குப்பதிவு செய்து ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்ததால் விவ சாயி வேதனையடைந்துள்ளார். சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சோமம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முரு கன். இவர் கடந்த 15.09.2023 ஆம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் காரமடை பகுதியில் தலைக்கவசம் அணியாமல் சென்றதாக இவ ரது இருசக்கர வாகனத்தின் மீது கோவை, கார மடை காவல் நிலையத்திலிருந்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஞாயிறன்று இவர் இருசக்கர வாகனத்தை புதுப்பிக்க, வாழப் பாடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவ லகத்திற்கு சென்றுள்ளார். அப்போது இவரது இருசக்கர வாகனத்திற்கு 3 ஆயிரம் ரூபாய் அபராதம் உள்ளதாகவும், அதனை ஆன்லை னில் செலுத்தி விட்டு, புதுப்பித்துக்கொள் ளுங்கள் என்று தெரிவித்துள்ளனர். கார மடை என்கிற ஊருக்கே போகாத நிலையில் அபராதம் விதித்ததை கண்டு அதிர்ச்சிய டைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து, முரு கன் காரமடை காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதற்கு, அங்கு பணி யில் இருந்த சிவக்குமார் என்கிற காவலர், தவறுதலாக வழக்கு பதிவு ஆகி உள்ளது என தெரிவித்துள்ளார். இந்த வழக்கினை ரத்து செய்து தர வேண்டும் என தொடர்ந்து வலியு றுத்தி வருகிறார். ஆனால், இதுவரையில் அவருக்கு தீர்வு கிடைக்கவில்லை. இதனால், விவசாயப் பொருட்களை விற் பனைக்கு இருசக்கரத்தில் எடுத்துச் செல்ல முடியாமல் மன உளைச்சலுக்குள்ளாகி யுள்ளார். மேலும் துறை சார்ந்த அதிகாரி களும் தமிழக அரசும் துரித நடவடிக்கை எடுத்து இருசக்கர வாகனத்தில் உள்ள வழக்கை ரத்து செய்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.