tamilnadu

img

தீக்கதிர் செய்தி எதிரொலி: குடிநீர் குழாய் சீரமைப்பு

தீக்கதிர் செய்தி எதிரொலி: குடிநீர் குழாய் சீரமைப்பு

பாபநாசம், ஆக.20 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பண்டாரவடை ஊராட்சியைச் சேர்ந்த கோயில் தேவராயன் பேட்டை கிராமத்தில்  மெயின் சாலையிலிருந்து ஆற்றங்கரைத் தெருவிற்கு செல்லும் சாலையில், சாலையோரம் கூட்டு குடிநீர் திட்ட குழாய்  செல்கிறது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த 3 மாதத்திற்கு மேலாக குடிதண்ணீர் வெளியேறி, வீணாக அரு கில் உள்ள வாய்க்காலில் கலந்து வந்தது.  இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க  கோரி, தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியானது. இச்செய் தியை தொடர்ந்து கூட்டு குடிநீர் திட்ட குழாய் சரி செய்யப்பட்டது.  மாவட்ட நிர்வாகத்திற்கும், செய்தி வெளியிட்ட தீக்கதிர் நாளி தழுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.