tamilnadu

img

தீக்கதிர் செய்தி எதிரொலி... வரத்து வாய்க்கால் உடனடி சீரமைப்பு

எஸ்.கே.பி கல்லூரியில்  மாணவர் பேரவை  துவக்கம்

திருவண்ணாமலை, அக். 15- திருவண்ணாமலை எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பில் மாணவர் பேரவை துவக்க விழா நடைபெற்றது. எஸ்.கே.பி கல்வி குழுமத்தின் தலைவர் கு.கருணாநிதி தலைமை வகித்தார். இணை செயலாளர் கே.வி.அரங்க சாமி மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி  ஆர்.சக்தி கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் துறைத்தலைவர்  ரா.ஸ்ரீதேவி வரவேற்புரையாற்றினார். துறைப்பேராசிரியரும் ஒருங்கிணைப்பாளருமான சு.அமுதா மாணவர் சங்க பிரதிநிதிகளை அறிமுகம் செய்து வைத்தார். மாணவர் சங்க தலைவர் ஹரிஹரன் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். மாணவர் சங்க செயலாளர் ஹரிப்ரியா இந்த கல்வியாண்டிற்கான செயல்திட்டங்களை வாசித்தார். கல்லூரி முதல்வர் எஸ்.பாஸ்கரன் சிறப்பு விருந்தினரைக் கவுரவித்து, மாணவர்கள் நல்ல மதிப்பெண்களுடன் பல்வேறு தனித்திறமை களை வளர்த்துக்கொண்டு புதிய படைப்புகளை உரு வாக்கி கல்லூரிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்தினார். பி.ஆர்.ஓ சையத் ஜஹிருத்தீன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக முன்னாள் மாண வரும் பொறியாளருமான அரவிந்த கணேஷ் மகா தேவன் கலந்துகொண்டு, இன்றைய சூழ்நிலையில் இளம்தலைமுறை பொறியியல் மாணவர்கள் வகுப்பறை கல்வியிலிருந்து நிஜ உலக வேலைக்குத் தயார்படுத்துதல் என்ற தலைப்பில் கலந்துரையாடினார்.