பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: டியுஜெ கண்டனம்
சென்னை, ஜூலை 14 - பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பெண் செய்தியாளர்களை அநாக ரீகமாக பேசி, ஒளிப்பதிவா ளர்களை மிரட்டிய காவல் அதிகாரிக்கு தமிழ்நாடு யூனி யன் ஆப் ஜர்னலிஸ்ட் சங்கம் கண்டனம் தெரிவித் துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் (டியுஜெ) சங்கத் தலைவர் பி.எஸ்.டி புருஷோத்தமன் வெளியிட்டுள்ள அறிக்கை யில், “சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் பகுதிநேர ஆசி ரியர்கள் தொடர் போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திங்க ளன்று தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது அவர் களை, காவல்துறையினர் கைது செய்ய முற்படும் போது ஒளிப்பதிவாளர்கள் படம் பிடிக்கவும், செய்தி சேக ரிக்கவும் களத்தில் இருந்த னர். ஆனால் ஊடக ஜனநாய கத்தின் உரிமையை பறிக் கும் வகையில் பெண் செய்தி யாளரை தரக்குறைவாக பேசியும், ஒளிப் பதிவா ளர்களை படம் எடுக்கவிடா மல் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்கள் அரா ஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். செய்தியாளரை மிரட்டி, ஊடக உரிமையை பறித்தது மட்டுமின்றி, கண்ணியம் இல்லாமல் நடந்து கொண்ட காவலர்களின் இச்செயலுக்கு கடும் கண்ட னம் தெரிவித்துக் கொள்வ தோடு, அவர்கள் மீது துறை ரீதியான நடவ டிக்கை எடுக்க வேண்டும் என டியுஜெ வலியுறுத்து கிறது”என கூறியுள்ளார்.