tamilnadu

img

பள்ளத்தில் கிரேன் கவிழ்ந்ததில் ஓட்டுநர் பலி

பள்ளத்தில் கிரேன் கவிழ்ந்ததில் ஓட்டுநர் பலி

சேலம், ஆக.27- ஏற்காட்டில் மரங்களை தூக்க பயன் படுத்தப்படும் கிரேன் வாகனம் கவிழ்ந்த தில் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், ஏற்காடு கொட்டச் சேடு கிராமத்திலுள்ள தனியார் காப்பி தோட்டத்தில் சில்வர் ஓக் மரங்கள் வெட்டும்  பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், செவ்வாயன்று வெட்டப்பட்ட மரங்களை கிரேன் மூலம் லாரியில் ஏற்றும் பணி நடை பெற்று வந்தது. ராணிப்பேட்டை மாவட் டம், ஏகாம்பரநல்லூர் கோவில் தெருவைச் சேர்ந்த வெங்கடேசன் - முத்தாலன் தம்பதி யின் மகன் தாமோதரன் (31) என்பவர் கிரேனை இயக்கினார். அப்போது, பள்ளத் தில் கிரேன் கவிழ்ந்ததில் தாமோதரன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த ஏற்காடு காவல் துறையினர், தாமோதரனின் உடலை  மீட்டு பிரேதப் பரிசேதனைக்கு அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.