ரயில்வே தொழிலாளர்களுக்கு மத்திய அரசு போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தெட்சினரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆர்இயு) சார்பில் விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சோமு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் எம்.முத்துக்குமார், சிஐடியு மா வட்டத் துணைத் தலைவர்கள் ஜி.வேலுச்சாமி, பி.ராமர், எஸ்.ஜெயராமன், பாரதிராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.