tamilnadu

img

பக்கிங்காம் கால்வாயை தூர்வாரி படகு போக்குவரத்து ஏற்படுத்துக!

பக்கிங்காம் கால்வாயை தூர்வாரி  படகு போக்குவரத்து ஏற்படுத்துக!

மீன்பிடி தொழிலாளர்கள், விற்பனையாளர்கள் கோரிக்கை

மயிலாடுதுறை, ஆக.2 - மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியம் பழையாறு அருகேயுள்ள தாண்ட வன்குளம் அண்ணா நகரில் மீன்பிடி  தொழிலாளர்கள் மற்றும் விற்பனையா ளர்கள் சங்கத்தின் (சிஐடியு)மயிலாடுதுறை மாவட்ட பேரவைக் கூட்டம் வி.கே.வள்ளல்  தலைமையில் நடைபெற்றது.  மாவட்டச் செயலாளர் ஜீவானந்தம் வேலையறிக்கையை முன் வைத்தார். பொதுச் செயலாளர் எஸ்.அந்தோணி சிறப்பு ரையாற்றினார். புதிய மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டு, தலைவராக வி.கே. வள்ளல், செயலாளராக சி.வி.ஆர்.ஜீவா னந்தம், பொருளாளராக கே.ஜனகர்பூபதி, துணைத் தலைவர்களாக எஸ்.அசோக், எஸ்.சிவசங்கரி, ஆர்.ஜெயமாலா, துணைச் செயலர்களாக ஆர்.தீபா, எம்.மகேஸ்வரி, மாவட்டக் குழு உறுப்பினர்களாக கே. முனுசாமி, ராமதாஸ், அலமேலு, ஆர்.சந்திரா  உள்ளிட்டோர் அடங்கிய 12 பேர் கொண்ட மாவட்டக் குழு  தேர்வு செய்யப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத் தில் தமிழக அரசால் அறி விக்கப்பட்ட மீன்பிடி துறை முகங்கள் மற்றும் மீன்பிடி  இறங்கு தளங்களை அமைக்க உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பழை யாறிலிருந்து திருமுல்லைவாசல் வரை  உள்ள பக்கிங்காம் கால்வாயை தூர்வாரி  படகு போக்குவரத்து ஏற்படுத்தி சுற்றுலா  தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன்வளம், விவசாயம், குடிநீர்  மற்றும் சுகாதாரத்தை பாதிக்கக் கூடிய வகை யில் இயங்கக் கூடிய இறால் பண்ணை களை தடை செய்ய வேண்டும். பழையாறில் இருந்து தரங்கம்பாடி வரை உள்ள மாவட்ட இணைப்பு சாலை பணிகள் நீண்ட காலமாகியும் முடிவடையாமல் உள்ளதை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எஸ்.சிவசங்கரி நன்றி கூறினார்.