மருத்துவர் ராமதாஸ் அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியை துவக்கிய பொழுது “என் குடும்பத்திலிருந்து யாராவது அரசியலுக்கு வந்தாலோ அல்லது பதவிக்காக தேர்தலில் போட்டியிட்டாலோ என்னை நடுத்தெருவில் சவுக்கால் அடியுங்கள்” என்று பேசினார். பின்னர் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். அமைச்சர் ஆனார். பா.ம.கவின் தலைவர் ஆனார். இப்பொழுது அவரது மருமகள் சவுமியா தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளர். வாய்ச் சொல்லில் வீரரடி என இவர்கள் குறித்துதான் பாரதி பாடினாரோ? இத்தகையவர்களை கூட்டணியில் வைத்து கொண்டுதான் பா.ஜ.க. வாரிசு அரசியல் பற்றி பேசுகிறது.