tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு  விருதுக்கு விண்ணப்பிக்கலாம் 

தஞ்சாவூர், செப்.16-  ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் 2025-2026 ஆம் ஆண்டிற்கு டாக்டர் அம்பேத்கரின் பெயரில் ஆதிதிராவிடர் நல மக்களின் முன்னேற்றத்திற்கும், அரிய தொண்டு செய்பவர்களுக்கும், தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்கள் ஆகியோர்களில் சிறந்தோர்க்கும் திருவள்ளுவர் திருநாளில் ”டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது” ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில், 2025-2026 ஆம் ஆண்டு முதல் “டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது” வழங்குவதற்காக வழங்கப்படும் தொகை ரூ.5.80 லட்சத்திலிருந்து ரூ.6.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.  எனவே, 2025 ஆம் ஆண்டிற்கான ”டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது” 2026 ஆம் ஆண்டில் திருவள்ளுவர் திருநாளன்று வழங்கப்படவுள்ளதை தொடர்ந்து, அவ்விருதினைப் பெற விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், அதற்கான உரிய படிவத்தினை தஞ்சாவூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ளுமாறும், பெறப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய முன்மொழிவுகளை 10.10.2025 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு: நாளை புதுக்கோட்டை வருகை

புதுக்கோட்டை, செப். 16-  வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். காந்திராஜன் தலைமையிலான தமிழ்நாடு சட்ட  மன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவர் செப்.18 அன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகைதர உள்ளார்.  இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மு. அருணா தெரிவிக்கையில், இக்குழுவானது வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நலத்துறை, நெடுஞ்சாலைகள், அற நிலையங்கள் துறை, வனம் ஆகியவற்றினை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள உள்ளது. 18.09.2025 அன்று புதுக்கோட்டை மாவட்டத் திற்கு உட்பட்ட பகுதிகளில் குழு ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ள மதிப்பீடுகள் தொடர்பாக  நடைபெற்று வரும் மற்றும் நிறைவேற்றப்பட்ட திட்டப் பணிகளை பார்வையிடுகிறது.  அதனைத் தொடர்ந்து, அன்று பிற்பகல் 3  மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி யரகத்தில் மதிப்பீட்டுக் குழு தலைவர் தலைமை யிலான குழுவினர்  மாவட்ட ஆட்சியர் மற்றும் துறைகளின் மாவட்ட அளவிலான உயர் அலு வலர்களுடன் கலந்துரையாடல் நடத்த உள்ள னர்’’ என்றார்.

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்திற்கு  முதல்வர் தீர்வு காண கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, செப். 16-  தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன மாநில நிர்வாகிகள் கூட்டம் செவ்வாய் அன்று திருச்சி வெண்மணி இல்லத்தில் நடந்தது.  கூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் எஸ்.கே. தியாகராஜன் தலைமை தாங்கினார். செப்.28, 29 ஆம் தேதி  சேலத்தில் நடைபெற உள்ள 6 ஆவது மாநில மாநாடு குறித்தும், சம்மேளன  செயல்பாடுகள் குறித்தும் மாநிலச் செய லாளர் வி. குப்புசாமி சிறப்புரையாற்றினார்.  கூட்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 30 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், தமிழக முதல்வர்  தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும். ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், துணைத் தலைவர்கள் பாலகிருஷ்ணன், முருகேசன் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநில உதவி செயலாளர் சந்திரன் நன்றி கூறினார்.