tamilnadu

img

டாக்டர் அம்பேத்கர் படிப்பகம் : எம்.சின்னத்துரை திறந்து வைத்தார்

புதுக்கோட்டை ஜன. 19 புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண் டார்கோவில் பாரதி நகரில் டாக்டர்  அம்பேத்கர் படிப்பகத்தை கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை திறந்து வைத்தார்.  குன்றாண்டார் கோயில் பாரதி நகரில் அப்பகுதி இளைஞர்களால் சிறிய, அழகிய நூலகம் ஒன்று உரு வாக்கப்பட்டது. இதற்கு டாக்டர் அம்பேத்கர் படிப்பகம் எனப் பெயரி ட்டுள்ளனர். இந்நூலக கட்டிடத்தை கந்த ர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை திறந்து வைத்தார். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் கே.தங்கவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.