tamilnadu

img

வரதட்சணை தடுப்புச் சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும்

வரதட்சணை தடுப்புச் சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும்

சிபிஎம் மாநில  சிறப்பு மாநாடு  தீர்மானம்

திருவள்ளூர், செப். 9 - வரதட்சணை சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும்; வரதட்சணை வழக்கு களை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வரதட்சணை ஒழிப்பு மாநில சிறப்பு மாநாடு வலியுறுத்தி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வரதட்சணை ஒழிப்பு மாநில சிறப்பு மாநாடு, செங்குன்றத்தில் செவ்வாயன்று (செப்.9) நடைபெற்றது. அப்போது, இதுதொடர்பான தீர்மானத்தை மாநிலக்குழு உறுப்பினர் அ. ராதிகா முன்மொழியவும், திருவள்ளூர் மாவட்டக்குழு உறுப்பினர் பி. பத்மா வழிமொழிந்த நிலையில் பேராதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அது வருமாறு: தினமும் 18 பெண்கள்  உயிரிழக்கும் அவலம் இந்திய சமூகத்தில் பெண்களின் வாழ்வை நாசமாக்கும் மிகப்பெரிய அடிமைத்தனம் வர தட்சணை. சித்ரவதை, கொலைகள் எல்லா வற்றிற்கும் காரணமாக இருக்கும் முக்கிய மான சமூகத் தீமையாக வரதட்சணை முறை உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமும், 1961-ஆம் ஆண்டு சட்ட ரீதியாகவும் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், இன்று வரை பெண்கள் மீது கொடுமைகள், அத்துமீறல்கள், மரணங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தேசிய குற்றப்பதிவு ஆணையத்தின் (என்சி ஆர்பி) புள்ளிவிவரப்படி, தினமும் சுமார் 18 பெண்கள் வரதட்சணை கொடுமை தொடர்பான காரணங்களால் உயிரிழக்கின்றனர். இந்நிலையில், பெண்களின் சமத்துவ வாழ்வை உறுதி செய்யவும், வரதட்சணை முறையை முற்றிலுமாக ஒழிக்கவும், சமூக, அரசியல், சட்ட ரீதியான போராட்டத்தை முன் னெடுக்கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  வரதட்சணை ஒழிப்பு மாநாட்டை நடத்துகிறது. திருமணத்தை, சந்தை  உறவாக்கிய வரதட்சணை! வரதட்சணை முறை என்பது, பொருளாதார சமத்துவமின்மை மற்றும் ஆணாதிக்க சமூக அமைப்பின் விளைவுகள் ஆகும்.

பெண்களை பரம்பரை சொத்துரிமையிலிருந்து விலக்கி, திருமணத்தை வியாபார சந்தை உறவாக மாற்ற வரதட்சணை முறை ஊக்குவிக்கிறது. முதலாளித்துவமும், பொருளாதார நெருக்கடியும் பெண்களை ‘சுமை’ எனக் காட்டி, அவர்களின் கல்வி, வேலை வாய்ப்பு களையும் பறித்து, வரதட்சணை முறையை வலுப்படுத்துகிறது. 1961 சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டாலும், நடை முறையில் அது அமல்படுத்தப்படுவதில்லை. காவல்துறையின் அலட்சியம், நீதிமன்றத் தின் நீண்ட தாமதங்கள், அரசியல் தலையீடு கள் ஆகியவை பெண்களுக்கு நீதியை மறுக்கின்றன. வரதட்சணை ஒழிப்பு சட்டத்தை  வலுப்படுத்த மக்கள் அழுத்தப் போராட்டமே ஒரே வழி. தற்கொலைக்குத்  தூண்டப்படும் பெண்கள் பெண்களின் உயிரிழப்புகள் மற்றும் திருமணத்துக்குப் பின் “போதிய வரதட்சணை கிடைக்கவில்லை” என்ற பெயரில், கொடுமை,  வன்முறை, எரித்துக் கொலை, தற்கொலைக்கு தூண்டப்படுதல் போன்றவற்றுக்கு பெண்கள் ஆளாகின்றனர். தமிழகத்தில் சமீபத்தில் திருப்பூர், திரு வள்ளூர், சேலம், மதுரை உள்ளிட்ட பல மாவட்டங் களில் ஏற்பட்ட பெண்களின் உயிரிழப்புகள், இந்தப் பிரச்சனை எவ்வளவு தீவிரமாய் தொடர்கிறது என்பதற்கு சான்று.

இத்தகைய நிகழ்வுகள் தனிப்பட்ட குடும்பச் சிக்கல்கள் அல்ல, முழு சமூகத்தைச் சிதைக்கும் பாலின அடக்குமுறை ஆகும். ‘எளிய திருமணம், வரதட்சணை இல்லா திருமணம்’  எனவே, பெண்களுக்கு சமத்துவ உரிமை  வழங்கப்பட வேண்டும். குடும்பத்தில், கல்வி யில், வேலைவாய்ப்பில் பெண்களுக்கு சம உரிமை அமைய வேண்டும். வரதட்சணை கொடுமைக்கு எதிராக  மக்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் அரசுஈடுபட வேண்டும். வரதட்சணை ஒழிப்பு என்பது தனிப்பட்ட பிரச்சனைகள் அல்ல. அது பெரும் சமூக மாற்றத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதி.  எனவே அரசு இயந்திரங்கள் மூலமாக வர தட்சணை சமூக குற்றம் என்பதை தொடர்ச்சியான  பிரச்சாரங்கள் மூலம் வலியுறுத்த வேண்டும். காவல் நிலையங்கள் நம்பிக்கையூட்ட வேண்டும் வரதட்சணை தடுப்பு சட்டத்தை கடுமை யாக அமல்படுத்தவும், விரைவு நீதி மன்றங்கள்  அமைத்து பெண்களுக்கு விரைந்து நீதி  வழங்க வேண்டும். வரதட்சணை வழக்குகள்  காவல் நிலையங்களுக்கு வருகிறபோது உரிய விசாரணை நடத்தி வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் காவல் நிலையங்கள் செயல்பட வேண்டும்.

காவல்துறையில் சிறப்புப் பிரிவு அமைத்து,  வரதட்சணை புகார்களை உடனடியாக பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.  குற்றவாளிகளுக்கு கடுமையான தண்ட னைகள் வழங்க காவல்துறையின் செயல் பாடுகளை உறுதிப்படுத்திட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்கள் குறை கேட்பு மையங்கள் அமைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடி சட்ட  உதவி, மருத்துவ சிகிச்சை, மனநல ஆலோ சனை வழங்கப்பட வேண்டும். வரதட்சணை ஒழிப்பு  பிரச்சாரம் அவசியம் திரைப்படங்கள், ஊடகங்கள், சின்னத் திரைகளில் வரதட்சணை குற்றம் என்பதை காட்சிப்படுத்திட வேண்டும். ஆடம்பரத் திரு மணங்கள், குடும்பப் பெருமை, சாதிப் பெருமை பேசுகிற நடவடிக்கைகள் எந்த வடி வில் வந்தாலும் அதை தடை செய்ய வேண்டும். கிராமம், நகரம், கல்லூரி, தொழிற் சாலை என அனைத்துத் தளங்களிலும் வர தட்சணை ஒழிப்பு பிரச்சாரங்களை நடத்த வேண்டும். கலை, இலக்கியம், நாடகம், சமூக  ஊடகங்கள் வழியாக வரதட்சணை ஒழிப்பு இயக்கங்களை வலுப்படுத்த வேண்டும். பெண்களுக்கு வேலை வாய்ப்பு, ஊதியம், சொத்துரிமை ஆகியவை சட்டப்படி  உறுதி செய்யப்பட வேண்டும். வரதட்சணை  எதிர்ப்பு பாடப்பரிவுகளை பள்ளி, கல்லூரி களில் பாடப் புத்தகங்களில் சேர்க்கப்பட வேண்டும். அரசு சார்பில் திரைப்படங்கள், தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் வழி யாக வரதட்சணை எதிர்ப்பு பிரச்சாரங்கள் நடத்தப்பட வேண்டும். ஆடம்பர திரும ணங்களுக்கு எதிரான சட்டங்கள் இயற்றி, எளிமையான திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும். வரதட்சணை ஒழிப்பு கண்காணிப்புக் குழுக்கள் பெண்களுக்கான தொழில் முனைவோர் திட்டங்களை அதிகரித்து, அவர்களுக்கு கடன் வசதி எளிதாக்கப்பட வேண்டும்.

அரசு மற்றும் மக்கள் இயக்கங்கள் இணைந்து  “எளிய திருமணம், வரதட்சணை இல்லா  திருமணம்” என்ற இயக்கத்தை முன்னெடுக்க  வேண்டும். மக்கள் பிரதிநிதிகள், சமூகத் தலைவர்கள், மதகுருக்கள் ஆகியோர் வர தட்சணை எதிர்ப்பு பிரச்சாரங்களில் பங்கு பெற வேண்டும். மாநில அளவில் வர தட்சணை ஒழிப்பு கண்காணிப்பு ஆணையம்  அமைத்து, ஆண்டு தோறும் அறிக்கை வெளி யிட வேண்டும்.  ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கண்காணிப்பு குழுக்கள் செயல்பட்டு, புகார்கள் நேரடியாக பரிசீலிக்க வேண்டும்.  அரசு அலுவலர்கள், காவல்துறை, நீதித் துறை ஆகியோருக்கு பாலின  சமத்துவ பயிற்சி வழங்கப்பட வேண்டும். சுய உதவி  குழுக்கள், கூட்டுறவுச் சங்கங்கள் வழியாக  பெண்கள் பொருளாதார ரீதியாக வலுப் படுத்தப்பட வேண்டும்.

அரசும் இணைந்து போராட வேண்டும் வரதட்சணை முறையை எதிர்ப்பது பெண்கள் மட்டும் செய்ய வேண்டிய போராட் டமல்ல; அரசும் இணைந்து நடத்த வேண்டிய போராட்டம் அதற்கான அனைத்து நடவடிக் கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப் பட்டுள்ளது. கருத்தரங்கம் முன்னதாக, மாற்று ஊடக மையத் தின் கலைநிகழ்வுகளுடன் மாநாடு தொடங்கி யது. மாநாட்டின் ஒருபகுதியாக நடைபெற்ற  கருத்தரங்கிற்கு மாநிலக்குழு உறுப்பினர் எஸ். வாலண்டினா தலைமை தாங்கினார்.  மாநிலக்குழு உறுப்பினர் ஐ. ஆறுமுகநயி னார் கருத்தரங்கை தொடங்கி வைத்தார். தமுஎகச மாநில துணைத்தலைவர் கவிஞர் ந.  முத்துநிலவன், முனைவர் ப. சுசீந்திரா, ஆய்வாளர் கீதாநாராயணன் ஆகியோர் கருத்துரையாற்றினர். மாநாடு மாநாட்டிற்கு திருவள்ளூர் மாவட்டச் செய லாளர் எஸ். கோபால் தலைமை தாங்கினார்.  மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.துளசி நாராயணன் வரவேற்றார். ஆய்வறிக்கையை  மாவட்டச் செயற்குழு உறுப்பினர் இ. மோகனா சமர்ப்பித்தார்.

கட்சியின் அரசியல்  தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகி, மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், திரைப் பட இயக்குநர் ராஜூ முருகன் உள்ளிட்டோர் உரையாற்றினர். சோழவரம் ஒன்றியச் செய லாளர் அ.து. கோதண்டம் நன்றி கூறினார்.