மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
மதுரை, மே 22- தொழிலாளர் சட்டங்களை திருத்துவதை உடனே நிறுத்த வேண்டும். தனியார்மயப் படுத்தும் மின்சார சட்டம் 2020 - ஐ கைவிட வேண்டும். மத்திய - மாநில அரசாங்கங்களின் உத்தரவுப்படி நிரந்தர - கேசுவல் காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் அனைவருக்கும் பொது முடக்க காலத்திற்கு முழு சம்பளம் வழங்கிட வேண்டும். அனைத்து முறைசாரா தொழிலா ளர்களுக்கும் நிவாரண நிதியும் , மளிகை பொருட்களும் -தடையின்றி விரைவாக கொடுப் பதை உறுதிப்படுத்த வேண்டும், வாரிய பதிவை வலியுறுத்தாதே, பொது முடக்கத்தால் வரு மானம் இழந்த தொழிலாளர்கள் அனைவ ருக்கும் மார்ச் , ஏப்ரல் , மே மாதங்களுக்கு தலா ரூ . 7500 வீதம் வழங்கிட வேண்டும். பொது முடக்க காலத்தில் அரும்பணி ஆற்றிய மருத்துவ பணியாளர்கள் , மின்சாரம் , வருவாய் துறை ஊழி யர்கள் , காவலர்கள் உள்ளிட்ட வர்களில் பணி யில் இறந்துபோக நேரிட்டால் நிரந்தரம் , கேசுவல் , காண்ட்ராக்ட் என வித்தியாப்படுத்தா மல் அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மதுரை எல்லீஸ்நகர் நலவாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் வெள்ளியன்று நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர். தெய்வராஜ், எச்எம்எஸ் மாவட்டத் தலைவர் வி. பாதர்வெள்ளை, எல்பி எப் மாவட்ட செயலாளர் எஸ். கருணாநிதி, ஐஎன்டியுசி மாவட்ட செயலாளர் ராஜசேகரன், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் நந்தாசிங் எம்எல்எப் மாநில செயலாளர் மகபூப்ஜான் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் சிஐடியு மாவட்ட தலைவர். மா. கணேசன், மாவட்ட நிர்வாகிகள் சி. சுப்பையா, வி. கோட்டைச்சாமி, எஸ். சந்தியாகு, ஜி. மோகன், கே. கலையரசி, பா. பழனியம்மாள், கே. அறிவழகன், சிஐடியு மாவட்ட பொருளாளர் ஜே. லூர்துரூபி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
போக்குவரத்து தொழிலாளர்
அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் எல்பிஎப் பொதுச் செயலாளர் வி. அல்போன்ஸ் தலைமையில் மதுரை பைபாஸ் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து தலை மையகம் முன் வெள்ளியன்று கருப்புக்கொடி அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு அரசு போக்குவரத்து தொழிலா ளர் சம்மேளன துணைத் தலைவர்கள் வி. பிச்சை, ஜி. ராஜேந்திரன், தலைவர் பி. எம். அழ கர்சாமி, பொதுச் செயலாளர் ஏ. கனகசுந்தர், ஏஐடியுசி பொதுச் செயலாளர் எம். நந்தாசிங், எல்பிஎப் சார்பில் கார்த்தி, சுரேஷ், டிடிஎஸ்எப் சங்க நிர்வாகிகள் எஸ். சம்பத், டி. திருமலை சாமி, எச்எம்எஸ் நிர்வாகி எஸ். ஷாஜகான், ஏஏஎல்எல்எப் நிர்வாகி எஸ். சங்கையா, டியுசிசி நிர்வாகி பி. செல்வம் உள்ளிட்டு ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கையில் நகராட்சி அலுவலகம் ,அரசு போக்குவரத்து கழக பணிமனை , குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம், தெப்பக்குளம் அருகே தொழிலாளர் நல அலுவலகம் , அரண் மனை ஆகிய இடங்களில் அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது . சிஐடியு மாவட்டச் செயலாளர் வீரையா, மாவட்ட த்தலைவர் உமாநாத்,வேங்கையா, உலக நாதன் ,ஏஐடியுசி ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் கண்ணன், சகாயம் ,ஐஎன்டியுசி மாவட்டச் செயலாளர் வீரக்காளை ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது காரைக்குடியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை கிளை அலுவலகம் , தலைமை அலுவலகம் , பழைய பேருந்து நிலையம் அருகே, சங்க அலுவலகம் , ரயில்வே நிலையம் ஆகிய இடங்களில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.சிஐடியூ மாவட்ட துணை தலைவர் சிவக்குமார், கிளைச் செயலாளர் மோகன்தாஸ்,எல்பிஎப் பொதுச் செயலாளர் குமார் பிரசாத்,கிளைத்தலைவர் ராமன், ஏஐடியுசி முருகேசன் , ஐஎன்டியுசி வெள்ளைச்சாமி,ஒய்வு பெற்றோர் சங்கத்தின் தலைவர் மாணிக்கம், கருப்பையா ஆகியோர் தலைமை வகித்தார்கள். மானாமதுரை பழைய பேருந்து நிலையத்திலும், பேரூராட்சி எதிர் புறமும் ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் விஜயகுமார்,முனியராஜ் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.