tamilnadu

img

சிறுபான்மையினருக்கு பெரும்பான்மையினரை விட அதிக பலன்களா?

சிறுபான்மையினருக்கு பெரும்பான்மையினரை விட அதிக பலன்களா?

நேரடியாக பதில் அளிக்க ஒன்றிய அமைச்சர் மறுப்பு

புதுதில்லி,  ஆக.24 - மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் சு.வெங்கடேசன் மற்றும் ஆர்.சச்சி தானந்தம் மத்திய சிறு பான்மையினர் நல அமைச்சரிடம் எழுப்பிய மிகவும் முக்கியமான கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய சிறுபான்மையினர் நல அமைச்சர் ஸ்ரீ கிரண்  ரிஜூஜூ, நேரடியான பதிலை தவிர்த்து அரசிய லமைப்பு பிரிவுகளை மேற்கோள் காட்டியுள்ளார். “இந்தியா மட்டுமே சிறுபான்மையினருக்கு பெரும்பான்மையினரை விட அதிக பலன்கள் மற்றும் பாதுகாப்புகள் வழங்கும் ஒரே நாடு என்பது  உண்மையா” என்ற கேள்வியை எம்.பி.-க்கள் எழுப்பியிருந்தனர். மேலும், இந்த கூற்று அரசின் நோக்கத்தையும் சிறுபான்மையினரிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் தேவையையும் குறை மதிப்பிற்கு உட்படுத்துகிறதா என்றும், சச்சார் குழு அறிக்கை போன்ற அறிக்கைகளின் பின்னணி யில் சிறுபான்மையினர் சிறப்பு கவனத்திற்கு தகுதி யற்றவர்களா என்றும் கேள்வி எழுப்பியிருந்தனர். அமைச்சர் கிரண் ரிஜூஜூ அளித்த பதிலில், “இந்திய அரசியலமைப்பின் பிரிவுகள் 15(1) &  (2), 16(1) & (2), 25(1), 26, 28 மற்றும் 29(2) ஆகியவை சிறுபான்மையினர் உட்பட அனைத்து  இந்திய குடிமக்களுக்கும் சுதந்திரங்கள் மற்றும்  பாகுபாட்டிற்கு எதிரான பாதுகாப்பு வழங்குவதாக  தெரிவித்துள்ளார். பிரிவுகள் 30(1), 30(1A) மற்றும்  30(2) குறிப்பாக சிறுபான்மையினரை உள்ளடக்கிய தாகவும் குறிப்பிட்டுள்ளார். “சபக்கா சாத் சபக்கா விகாஸ்” கொள்கையின் கீழ், ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட முஸ்லிம்,  பௌத்தம், கிறிஸ்தவம், சமணம், பார்சி மற்றும்  சீக்கியம் ஆகிய ஆறு சிறுபான்மை சமுதாயங்கள் உட்பட சமுதாயத்தின் அனைத்து அடுக்குகளின் நலன் மற்றும் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள்  செயல்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், நிதி ஆயோக்கின் வளர்ச்சி கண்காணிப்பு  மற்றும் மதிப்பீட்டு அலுவலகம் வழியாக திட்டங் களை கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்படுவ தாகவும் கூறியுள்ளார். சச்சிதானந்தம் எம்.பி., விமர்சனம் அமைச்சர் கிரண் ரிஜூஜூ-வின் பதில் எம்.பி. களின் நேரடியான கேள்விகளுக்கு தெளிவான பதில் அளிக்காமல் ஏய்ப்பு வேலையாக உள்ளது  என ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., விமர்சித்துள்ளார். “இந்தியா மட்டுமே சிறுபான்மையினருக்கு அதிக  பலன்கள் வழங்கும் நாடு” என்ற சங் பரிவாரத்தின ரின் கூற்றுக்கு நேரடியாக ஆம் அல்லது இல்லை  என்று பதில் அளிக்காமல், அரசியலமைப்பு பிரிவு களை மேற்கோள் காட்டி விஷயத்தை திசை திருப்பியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார். சச்சார் குழு அறிக்கை தெளிவாக சிறுபான்மை யினர், குறிப்பாக முஸ்லிம் சமுதாயத்தின் பின்தங்கிய நிலையை வெளிப்படுத்தியது. கல்வி, வேலைவாய்ப்பு, வருமானம் போன்ற  அனைத்து துறைகளிலும் சிறுபான்மையினர் பின்தங்கிய நிலையில் இருப்பது நிரூபிக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் அவர்களுக்கு சிறப்பு  கவனம் தேவை என்பது மறுக்க முடியாத உண்மை. அரசியலமைப்பின் அடிப்படை உணர்வை புரிந்துகொள்ளாத அணுகுமுறை யையே பாஜக அரசு பின்பற்றுகிறது எனவும் சச்சி தானந்தம் எம்.பி., கூறியுள்ளார்.