tamilnadu

குழித்துறை நகராட்சி : பாஜக ஆதரவுடன் திமுக கவுன்சிலர் வெற்றி

குழித்துறை, மார்ச்.4- குழித்துறை நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இதில் சிபிஎம் 5, திமுக 5, பாஜக 5, காங்கிரஸ் 4, பாமக 1, சுயேட்சை 1 என வெற்றி பெற்றிருந்தனர்.  திமுக சார்பில் மெர்லின் தீபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.  அவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், திமுக முன்னாள் நகர்மன்ற தலைவரும் குழித்துறை திமுக நகர செயலாளருமான பொன் ஆசை தம்பியும் வேட்பு மனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் பிரவின் ராஜாவும் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி வேட்பாளர் மெர்லின் தீபா 9 வாக்குகளும், பாஜக ஆதரவுடன் ஆசை தம்பி 10 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் பிரவின் ராஜா 2 வாக்குகளும் பெற்றனர்.  இந்நிலையில் குறைந்த வாக்குகள் பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் பிரவின் ராஜாவின் மனு நீக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் மெர்லின் தீபா மீண்டும் 9 வாக்குகளை பெற்றார். பாஜக ஆதரவுடன் ஆசை தம்பி 12 வாக்குகள் பெற்றார். பின்னர் நடந்த நகராட்சி துணை தலைவர் தேர்தலில், பாஜக ஆதரவுடன் காங்கிரஸ் வேட்பாளர் பிரவின் ராஜா 12 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். திமுக ஆதரவுடன் சிபிஎம் வேட்பாளர் சர்தார் ஷா - 9 வாக்குகள் பெற்றார்.  துணை தலைவராக சிபிஎம்மின் சர்தார் ஷா தேர்வு செய்யப்படுவதை தடுக்கவே இத்தகைய நிகழ்வுகள் நடந்ததாகத் தெரிகிறது.