tamilnadu

வாக்குத் திருட்டு மற்றும் பீகார் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு திமுக கண்டனம்!

வாக்குத் திருட்டு மற்றும் பீகார் சிறப்பு  தீவிர திருத்தத்துக்கு திமுக கண்டனம்!

சென்னை, ஆக. 13 - திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில், சுதந்திரமான மற்றும் நேர்மை யான தேர்தலுக்கு அச்சுறுத்தலாக உள்ள ‘வாக்குத் திருட்டு’ மற்றும் ‘சிறப்பு தீவிர திருத்தம்’ ஆகிய நடவடிக்கைகளுக்கு கண்ட னம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் தேர்தல் நடை முறைக்கு அடிப்படை ஆவணம் ஆகும்.  இந்நிலையில், பீகார் மாநிலத்தில் 65 லட்சம் வாக்காளர்களை தன்னிச்சையாக நீக்கி யது, தேர்தல் களத்தின் சம நிலையை அசைக்கும் ஜனநாயக விரோத நடவடிக்கை கள் ஆகும். தேர்தல் ஆணையத்தின் ஒரு  சார்பான நடவடிக்கைகளுக்கு எதிராக, இந்தியா கூட்டணி எம்.பி.க்களை நடத்திய  பேரணியை தடுத்து நிறுத்தி கைது செய்தது,  ஒன்றிய பாஜக அரசின் ஆணவப் போக்கா கும் என்று தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது. திமுகவின் 5 நாடாளுமன்ற உறுப்பி னர்கள் ஜூலை 17 அன்று தலைமை தேர்தல்  ஆணையரைச் சந்தித்து, இறந்த வாக்கா ளர்களை நீக்குதல், பிராந்திய மொழிகளில் தொகுப்பு கையேடுகள் வழங்குதல், அஞ்சல்  வாக்கு எண்ணிக்கையில் குழப்பங்களை அகற்றுதல் உள்ளிட்ட ஐந்து முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து விரிவான மனு அளித்ததும் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப் பட்டது.  ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையில் மாபெரும் வெற்றி வாகை சூடிய கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.