tamilnadu

img

அதிமுக - பாஜக கூட்டணிக்கு தமிழகத்தில் இனி இடமில்லை.... சிபிஐ அரசியல் மாநாட்டில் தலைவர்கள் சூளுரை....

மதுரை:
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியை தோற்கடிக்க தமிழக மக்கள் திமுக தலைமையிலான கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்கள் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் எழுச்சி மாநாடு மதுரையில் வியாழனன்று நடைபெற்றது. மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சிபிஐ அகில இந்திய பொதுச்செயலாளர் து.ராஜா, விடுதலைப் போராட்ட வீரர் ஆர்.நல்லகண்ணு, மூத்த தலைவர் தா.பாண்டியன், மக்களவை உறுப்பினர்கள் கே.சுப்பராயன், எம்.செல்வராசு, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஏ.பெருமாள், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய யூனியன் முஸ்லிம்லீக் நிர் வாகி அப்துல் ரகுமான், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஹே.எம்.எச்.ஜவஹிருல்லா, திராவிடர் கழக தலைவர் கலி.பூங்குன்றன், இந்திய ஜனநாயக கட்சி தலைவரும் மக்களவை உறுப்பினருமான பாரிவேந்தர், கொங்குநாடு மக்கள் கட்சிதலைவர் ஈஸ்வரன் உள்ளிட்ட பலர், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டுமென தமிழகமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். 

முன்னதாக கம்யூனிஸ்ட் தலைவர் சிற்பி.சிங்காரவேலர் நினைவுதினம் வியாழனன்று கம்யூனிஸ்ட்களால் தமிழகம் முழுவதும் கடைபிடிக் கப்பட்டது. அரசியல் எழுச்சி மாநாட்டில் அவரது படத்திற்கு கம்யூனிஸ்ட் தலைவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.

தீர்மானங்கள்
இந்த மாநாட்டில் பெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்தும்தமிழக சிறைகளில் எந்த விசாரணையும் இன்றி அடைக்கபட்டுள்ள சிறுபான்மை மக்களை விடுவிக்க வேண்டும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட7பேரை விடுவிக்க வேண்டும் என்பனஉள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முன்னதாக மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன் வரவேற்றார். மாநாட்டில் சிபிஐ மாநகர் மாவட்டச்செயலாளர் சரவணன், புறநகர்
மாவட்டச் செயலாளர் பா.காளிதாசன்உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். 

தா.பாண்டியன் பேச்சு
இந்த மாநாட்டில் பேசிய மூத்த தலைவர் தா.பாண்டியன், “திமுக தலைமையிலான அணிதான் வெற்றிபெறும். செம்படையை யாராலும் தோற்கடிக்க முடியாது. வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க மதுரையில் திமுகதலைமையிலான கூட்டணிக்கு வெற்றியை பிரகடனம் செய்யும் மாநாடு இது. அதிமுகவின் தோல்விக்கு இந்த மாநாடு தீர்ப்பளிக்கும். பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி முட்டுக் கொடுத்து கொண்டிருக்கிறார். முதல்வர் பதவிக்காக வகுப்பு வாதத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி தலைவணங்கி நிற்கிறார். பாஜகவுக்கு அதிமுக வேண்டுமானால் அடிமையாக இருக்கலாம். தமிழக மக்களை அடிமைபடுத்த முடியாது” என்றார்.

;