tamilnadu

கடலூர் மாநகராட்சியில் திமுக கூட்டணி வெற்றிவாகை!

சிதம்பரம், பிப்.22- கடலூர் மாவட்ட நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி களுக்கான நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பெருபான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. சிதம்பரம் நகராட்சியில் 33 வார்டுகளில் 31 வார்டில் வெற்றிபெற்றுள்ளது. அதேபோல் கிள்ளை பேரூராட்சியில் திமுக கூட்டணி 15-க்கு 12 இடங்களைப் பெற்றுள்ளது. பரங்கிப்பேடையில் 18-க்கு 13 இடங்களையும், சேத்தியாதோப்பில் 15-க்கு 11 இடங்கள், புவனகிரியில் 18-க்கு 11 இடங்கள் அதேபோல் காட்டுமன்னார் கோவில்., லால்பேட்டை, திருமுட்டம்  உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் திமுக கூட்டணி பெருபாண்மையாக வெற்றிபெற்று நகராட்சி மற்றும் பேரூராட்சிகளைக் கைப்பற்றியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், திட்டக்குடி, வடலூர் உள்ளிட்ட 6 நகராட்சிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றியது. அதேபோல் இம்மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம், மங்களம் பேட்டை, புதுப்பேட்டை, குறிஞ்சிப்பாடி, மேல்பட்டம் பாக்கம், தொரப்பாடி உள்ளிட்ட அனைத்து  பேரூராட்சிகளையும் திமுக தலைமையிலான கூட்டணியே கைப்பற்றியுள்ளது.