tamilnadu

தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் கட்டுமானத் தொழிலாளர் மாநில மாநாடு கோரிக்கை

தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் கட்டுமானத் தொழிலாளர் மாநில மாநாடு கோரிக்கை

திருப்பூர், அக். 6 – தீபாவளி பண்டிகைக் காலத்திற்கு கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நல வாரியத்தின் மூலம் ரூ.5 ஆயிரம் போனஸ் தொகை வழங்குமாறு கட்டு மானத் தொழிலாளர் சம்மேளன தமிழ்நாடு  மாநில மாநாடு வலியுறுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் கட்டுமானத் தொழிலாளர் சம்மேளனத் தின் 10 ஆவது மாநில மாநாடு ஞாயி றன்று தொடங்கியது. இரண்டாவது நாளான திங்களன்று நடைபெற்ற மாநாட்டில் சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் எம்.சந்திரன் வாழ்த்திப் பேசி னார். பொதுச் செயலாளர் டி.குமார் அறிக் கையை முன்வைத்தார். இம்மாநாட்டில் நலவாரியத்தில் பதிவு செய்திருக்கும் கட்டுமானத் தொழி லாளர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். கட்டு மானத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதி யத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க  வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு 55 வயது நிறைவடையும்போது ஓய்வூ தியம் வழங்குவது என்ற வாரியக் கூட்ட  முடிவை அமலாக்க வேண்டும்.  பணியின்போது விபத்தில் காய மடைந்தோருக்கு ரூ.2 லட்சம் உதவித் தொகை வழங்க வேண்டும். ஒருமுறை பிஎப் திட்டத்தில் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்களை நலவாரியத்தில் பதிவு செய்வதை உறுதி செய்ய வேண் டும். வெளிமாநிலத் தொழிலாளர்களை தொழிற்சங்கங்கள் அங்கீகரித்து சேர்ப்பதற்கு திருத்தம் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் தேர்வு தமிழ்நாடு கட்டுமானத் தொழிலா ளர் சம்மேளனத்தின் சிறப்புத் தலைவ ராக ஆர்.சிங்காரவேலு, மாநிலத் தலை வராக கே.பி.பெருமாள், பொதுச் செய லாளராக டி.குமார், பொருளாளராக ஜெ.லூர்துரூபி, துணைப் பொதுச் செய லாளர்களாக கே.தங்கமோகனன், வி. கிருஷ்ணமூர்த்தி, பி.ராமர், உதவித் தலைவர்களாக மாலதி சிட்டிபாபு, லூர்து சாமி, சண்முகம், மனோகரன், சி.மோ கன், டி.பாபு, ஈடிஎஸ்.மூர்த்தி, சி.கலா வதி, துணைச் செயலாளர்களாக ஆர்.ராஜாமுகமது, நடராஜன், வேலம், ராதா,  எஸ்.சேகர், வி.பாலகிருஷ்ணன், சுரேஷ் குமார், பாலசந்திரபோஸ், துரைசாமி, கலைச்செல்வி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் வி.குமார் மாநாட்டை நிறைவு  செய்து உரையாற்றினார். வரவேற்புக் குழுச் செயலாளர் எம்.கணேசன் நன்றி  கூறினார்.