tamilnadu

img

நாச்சியார்கோவில், திருநறையூர் ஊராட்சிகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்துக! மனிதநேய மக்கள் கட்சி அமைச்சரிடம் கோரிக்கை

நாச்சியார்கோவில், திருநறையூர் ஊராட்சிகளில்  குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்துக!  மனிதநேய மக்கள் கட்சி அமைச்சரிடம் கோரிக்கை

கும்பகோணம், ஆக. 4-  தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நாச்சியார்கோவில், திருநறையூர் பகுதிகளில் உள்ளாட்சி நிர்வாகம் கலைக்கப்பட்ட பிறகு, திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளின்  செயல்பாடுகள் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இல்லை என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் குற்றம் சாட்டப்பட்டு, திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக உயர்கல்வி துறை அமைச்சருமான கோவி. செழியனிடம் கோரிக்கை மனு வழங்கினர். அந்த மனுவில், தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாச்சியார்கோவில், திருநறையூர் ஊராட்சிகளின் பல பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படாமல், துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரகேடு ஏற்படுகிறது. தெருக்களிலும், முக்கிய வீதிகளிலும் தொடர்ந்து தெருவிளக்குகள் எரிவதில்லை.  நாச்சியார்கோவில் தேரடியில் இருந்து கோவனூர் செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்துள்ளது மேற்படி சாலையில்  புதிய சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருவதால் தினந்தோறும் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. எனவே மேற்படி சாலையை புதுப்பித்து சாலை அமைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் தெரு நாய்களின் பிரச்சனை தமிழகம் இருக்கிறது. தற்சமயம் நீதிமன்றம் சில விதிகளுக்கு உட்பட்டு நாய்களை கருணை கொலை செய்ய அனுமதி தந்துள்ளது. இதனை பயன்படுத்தி தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். இவை அனைத்தும் மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகள் என்பதால் அமைச்சர்  நேரடி கவனத்தில் கொண்டு, துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.