tamilnadu

img

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மதுரை, ஜூலை 20- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி சங்கம் சார்பில் திங்களன்று உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் பி. இராமர், மாற்றுத் திறனாளி சங்க மாவட்டச் செயலாளர் வி.முருகன், நாகராஜ், சின்னசாமி உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

;