tamilnadu

img

நியமன உறுப்பினர் பதவிக்கு விருப்ப மனு அளித்த மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள்

நியமன உறுப்பினர் பதவிக்கு விருப்ப மனு அளித்த மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள்

மயிலாடுதுறை, ஜூலை 11-  மயிலாடுதுறை மற்றும் சீர்காழி நகராட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் நகர் மன்ற நியமன உறுப்பினர் பதவிக்கு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், அதன் நிர்வாகிகள் விருப்ப மனு அளித்தனர்.  மயிலாடுதுறை நகராட்சியில் சங்கத்தின் மயிலாடுதுறை ஒன்றிய தலைவர் யூ.ராஜேந்திரன் விருப்ப மனுவை மாற்றுத்திறனாளிகள் முன்னிலையில் நகராட்சி ஆணையரிடம் வழங்கினார். இந்நிகழ்வில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம். புருஷோத்தமன், மாவட்ட துணைச் செயலாளர் எம். சொக்கலிங்கம்,  மயிலாடுதுறை ஒன்றியச் செயலாளர் என். செபஸ்திகன், ஒன்றிய துணைச் செயலாளர் எஸ். சுந்தரபாண்டியன், எல்.எம். சாருமதி, மாவட்டக் குழு உறுப்பினர் பி. கார்த்திக், நகர பொறுப்பாளர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் நியமன உறுப்பினர் பதவிக்கு வைத்தீஸ்வரன் கோவில் பகுதி மாற்றுத்திறனாளிகள் முன்னிலையில் சங்கத்தின் நகர செயலாளர் வி.பி.முருகன் விருப்பமனுவை, பேரூராட்சி செயல் அலுவலரிடம் அளித்தார்.  இந்நிகழ்வில் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் ஆர். நாகராஜன், மாவட்டச் செயலாளர் எம். புருஷோத்தமன் மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர்.