tamilnadu

img

சிபிஎம் தலைவர்களுடன் இயக்குநர் சீனு ராமசாமி சந்திப்பு

சென்னை, அக். 23- என்.லிங்குசாமி தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையமைப் பில் “இடம் பொருள் ஏவல்” என்ற திரைப்படம் தயாரிக்கப் பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கதா நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மறைந்த பூ ராமு கம்யூனிஸ்ட் தலைவராக நடித்துள்ளார். இதில் விஷ்ணு விஷால், நந்தலாலா, சோழ நாகராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமூகத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பு குறித்தும், அவர் களை பெருமைபடுத்தும் வகை யிலும் இந்தப்படம் எடுக்கப் பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இந்த திரைப்படம் நவம்பர் 11ஆம் தேதி தமிழகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு  அலுவலகத்தில் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன், அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோரை ஞாயிறன்று (அக். 23) சந்தித்தார். தமுஎகச தலைவர்களில் ஒரு வரான இரா.தெ.முத்து உடன் இருந்தார்.