tamilnadu

img

கடன் செயலிகளை பயன்படுத்த வேண்டாம்

மதுரை, ஜூலை 2- கடன் வாங்குவதற்கு (லோன் ஆப்)  கடன் செயலிகளை பயன்படுத்த வேண்  டாம் என்று தமிழக காவல்துறை தலை மை இயக்குநர் சி.சைலேந்திர பாபு கேட்டுக் கொண்டுள்ளார். சனிக்கிழமையன்று மதுரையில் செய்தியாளர்களிடம் காவல்துறைத் தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு  கூறியதாவது: சமீபகாலமாக மாநிலம் முழுவதும் கஞ்சா கடத்துவோருக்கு எதிரான இரண்டு முக்கிய இயக்கங்களில் 18,000 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப் பட்டுள்ளனர். பல வாகனங்கள் பறி முதல் செய்யப்பட்டுள்ளன. கஞ்சா கடத்தலைத் தடுப்பதற்காக குற்றம் சாட்டப்பட்ட 2,200 பேரின் வங்  கிக் கணக்குகளை முடக்கி, சொத்துக் களைப் பறிமுதல் செய்துள்ளோம். இவர்களில் 200 பேர் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு பரிந்து ரைக்கப்பட்டுள்ளது.

மோப்ப நாய்கள்

ரயில்களில் திருட்டுத்தனமாக கடத்  தப்படும் கஞ்சா பார்சல்களை அடை யாளம் காண மோப்ப நாய்களை ஈடு படுத்த மாநிலக் காவல்துறை திட்ட மிட்டுள்ளது. கஞ்சா பார்சல்களை மோப்பம் பிடிக்க சென்னையில் இரண்டு நாய்  களுக்கும், சேலம் மற்றும் கோயம்புத்  தூரில் தலா ஒன்றும் பயன்படுத்தப் படும். நாய்களுக்கு தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கஞ்சா கடத்தலை தடுக்க தமிழக காவல்துறையினர் மாநில எல்லை யைத் தாண்டியும் சென்று குற்றவாளி களை கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலத்திலும் கூட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா கடத்தல் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. மற்றொருபுறத்தில் கஞ்சா ஒழிப்பு நடவடிக்கை தொடர்ந்து நடை பெற்று வருகிறது. இளைஞர்கள் கஞ்சா வுக்கு அடிமையாவதைத் தடுக்க விழிப்  புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரு கின்றன என்றார்.

கடன் செயலிகள்

கடன் வாங்குவதற்கு லோன் ஆக் களை (செயலிகளை) பயன்படுத்த வேண் டாம் என்றும் காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு எச்சரித்தார். இது தொடர்பாக அவர் கூறுகை யில், “கடன் வழங்குபவர்கள் கடன் கேட்பவர்களின் புகைப்படங்கள், கை பேசி எண்களை கேட்டுப் பெறுகின்ற னர். கடனை வழங்குபவர்கள், கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களை அச்சு றுத்துகிறார்கள். கடன் வாங்கியவர் களைப் பற்றி தவறான செய்திகளை அனுப்புகிறார்கள்.  கடன் வழங்குபவர்கள், “கடன் செலுத்த முடியாதவர்களின் புகைப் படங்களை மார்பிங் செய்கின்றனர், அவர்கள் பெண்கள் அல்லது ஆண்களு டன் இருப்பது போல் புகைப்படத்தைப் பகிர்கின்றனர். “மார்ஃபிங் செய்யப் பட்ட படம் உண்மையானது போல்  தெரிகிறது. இதனால் கடன் வாங்கி யோர் கடுமையான பாதிப்புகளைச் சந்திக்கின்றனர். மக்கள் கடன் வாங்கு வதற்கு லோன் தொடர்பான செயலி களை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். கந்து வட்டிக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கை தொடர்ந்து நடைபெறு கிறது. அதிகவட்டி வாங்கும் தடை  சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்  டுள்ளனர் என்றார்.

காவல்துறை தவறால் 12 மரணங்கள்

முன்னதாக மதுரை தெப்பக்குளம் தனியார் கல்லூரியில், காவல்நிலைய மரணம் தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கம் சனிக்கிழமை நடை பெற்றது. தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா  கார்க், மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார், காவல் கண்காணிப்பா ளர் சிவபிரசாத் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய காவல்துறை இயக்குநர், அகில  இந்திய அளவில் சுமார் 950 மரணங்கள்,  காவல் நிலையத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக நடந்துள்ளன. தமிழகத்  தில் மட்டும் 84 மரணங்கள் நடந்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 18 காவல் நிலைய மரணங்கள் தமிழகத்தில் நடந்  துள்ளன. இது தொடர்பாக 80 வழக்கு கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 12  வழக்குகளில் மட்டுமே காவல்துறை யின் தவறு காரணமாக மரணம் நிகழ்ந்த தாக சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் தெரி யவந்தது. தமிழகத்தில் இனி ஒருவர் கூட காவல்துறை கட்டுப்பாட்டில் இருக்  கும்போது உயிர் இழக்கக்கூடாது என்று முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். காவல்துறையினர் சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும். காவல்நிலையத்திற்கு வருப வர்கள் வேறு காரணங்களால் மரணம டைந்தாலும் அது காவல்நிலைய மர ணம் என்றே கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்படுவது காவல்துறையினரே என்றார்.

 

;