tamilnadu

டயாலிசிஸ் ஊழியர்களின் பணி நிரந்தரக் கோரிக்கை

டயாலிசிஸ் ஊழியர்களின் பணி நிரந்தரக் கோரிக்கை

அரசு பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை, அக். 24 - அரசு மருத்துவமனைகளில் தற் காலிகமாகப் பணியாற்றும் டயாலிசிஸ் ஊழியர்களின் பணி நிரந்தரக் கோரிக் கையை நான்கு வாரங்களில் பரிசீலிக் கும்படி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்காசியைச் சேர்ந்த எஸ். காளிமுத்து, எண்ணூரைச் சேர்ந்த டி. கார்த்திகைதேவி உள்பட 126 பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்  தாக்கல் செய்திருந்தனர். தமிழ்நாட்டில் உள்ள 26 அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனை களில் டயாலிசிஸ் பணியாளர்களாக 2021-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டோம். எங்களுக்கு மாதம் ரூ. 20 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்பட்டது. மூன்று  ஆண்டுகளாக எந்த ஒரு இடைநிறுத்த மும் இல்லாமல் தொடர்ந்து பணி யாற்றி வருகிறோம். தமிழ்நாட்டில் பொதுமக்கள் மத்தி யில் சிறுநீரகப் பாதிப்பு தற்போது அதி கரித்து வருவதால், அதிகப் பணம்  கொடுத்து தனியார் மருத்துவமனை களில் டயாலிசிஸ் செய்ய முடியாத  ஏழைகள், அரசு மருத்துவமனை களுக்குத்தான் வருகின்றனர். அத னால் எங்களது பணி மிகவும் அவசிய மாகும். இதனால், இரவும் பகலுமாக நாங்கள் வேலை செய்கிறோம். டயாலிசிஸ் இயந்திரங்களை அனு பவம் வாய்ந்த எங்களைப் போன்ற ஊழி யர்களால்தான் இயக்க முடியும். எனவே, எங்களைப் பணி நிரந்தரம் செய்யும்படி கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை 24 அன்று அரசுக்குக் கோரிக்கை  மனு அனுப்பினோம். இதுவரை எந்தப்  பதிலும் இல்லை. மேலும், தற்காலிக ஊழியர்களாக நாங்கள் நியமிக்கப்பட்டாலும், முறை யான வழியில்தான் நியமன நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டது. சட்டவிரோத மாக நாங்கள் நியமிக்கப்படவில்லை. அதனால், வேறு புதிய ஊழியர்களை அரசு நியமித்தால், அது எங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.  எனவே, எங்களைப் பணி நிரந்தரம் செய்யாமல் புதிய டயாலிசிஸ் பணியா ளர்களை நியமிக்கத் தடை விதிக்க வேண்டும். எங்களைப் பணி நிரந்தரம்  செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும்  எனக் கூறியிருந்தனர். இந்த மனுவை நீதிபதி ஏ.டி. ஜெக தீஷ் சந்திரா விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் அமுத கணேஷ், கோபிநாத், சி. ஆனந்த்ராஜ் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அவர் களின் வாதங்களைக் கேட்ட நீதிபதி  மனுதாரர்களின் பணிநிரந்தரக் கோ ரிக்கை மனுக்களை தமிழ்நாடு சுகா தாரத்துறை செயலாளர், மருத்துவக் கல்வி இயக்குநர் உள்ளிட்டோர் பரி சீலித்து நான்கு வாரங்களுக்குள் தகுந்த  உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என  உத்தரவிட்டார்.