tamilnadu

img

மதுரையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு ஹாக்கி மைதானம், நீச்சல் குளம், அன்பு இல்லத் திட்டம் உள்ளிட்ட பணிகளை விரைவுபடுத்த உத்தரவு

மதுரையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு ஹாக்கி மைதானம், நீச்சல் குளம், அன்பு இல்லத் திட்டம் உள்ளிட்ட பணிகளை விரைவுபடுத்த உத்தரவு

மதுரை, செப்.24- தமிழ்நாடு துணை முதல மைச்சர் உதயநிதி ஸ்டாலின் புத னன்று மதுரை மாவட்டத்தில் பல்  வேறு வளர்ச்சி மற்றும் விளை யாட்டு மேம்பாட்டு திட்டங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முதலில், மதுரை மாவட்ட விளை யாட்டு வளாகத்தில் ரூ.9.47 கோடி மதிப்பில் சர்வதேச தரத்திலான செயற்கை புல்வெளியுடன் கூடிய ஹாக்கி மைதானம் புதுப்பிக்கும் பணி, ரூ.12.50 கோடி மதிப்பில் டைவிங் வசதியுடன் கூடிய நீச்சல் குளம் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார். வரும் நவம்பர் மாதம் சென்னை மற்றும் மதுரை யில் நடைபெறவுள்ள ஆண்களுக் கான ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை 2025 போட்டிகளை முன்னிட்டு, ஹாக்கி மைதானம் புதிய டர்ஃப், கேலரி வசதிகளுடன் விரைவில் தயாராகும் என்றும் அதி காரிகளை பணிகளை துரிதப்படுத்து மாறு அவர் அறிவுறுத்தினார். அதன்பின், மாவட்ட விளை யாட்டு வளாகத்தில் புதிதாக ரூ.1  கோடி மதிப்பில் அமைக்கப்பட்  டுள்ள பாரா விளையாட்டு அரங்கில் பயிற்சி பெறும்  மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்  களை சந்தித்து ஊக்கமளித்தார். வீரர்கள் தாங்கள் வென்ற பதக் கங்களை காட்டியபோது துணை முதல்வர் வாழ்த்தி பாராட்டினார். பின்னர், மதுரை மேற்கு ஊராட்சி  ஒன்றியம், தேனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கட்டப்புளி கிராமத்தில் கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 195 பயனாளிகளுக்காக கட்டப் பட்டுவரும் அன்பு இல்லங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஒரு இல்லத்திற்கு ரூ.3.5 லட்சம் அரசு உதவியுடன், கூடுதல் நிதி  உதவி இணைக்கப்பட்டு ஆறு  மாதங்களில் வீடுகள் முடிக்கப்பட்டு  பயனாளிகளிடம் ஒப்படைக்கப் படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மொத்தம் ரூ.2.77 கோடி மதிப்பில்  சாலை, நீர்த்தேக்க தொட்டி, பூங்கா, தெருவிளக்கு உள்ளிட்ட  அடிப்படை வசதிகள் அமைக்கப்பட  உள்ளன. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற துணை முதல்வர், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், உங்க ளுடன் ஸ்டாலின் முகாம்கள், கலை ஞர் ஸ்போர்ட்ஸ் கிட் திட்டம், கலை ஞர் கனவு இல்லம், மக்க ளைத்தேடி மருத்துவம் போன்ற பல்வேறு திட்டங்கள் மதுரை மாவட்டத்தில் எவ்வாறு செயல் படுத்தப்படுகின்றன என்பதை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மக்கள் நலனுக்கான இந்தத் திட்டங்கள் தடை இல்லாமல் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த ஆய்வின்போது வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர்பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் தங்க.தமிழ்செல்வன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ. தளபதி, மு.பூமிநாதன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன்  உட்பட பலர் கலந்து  கொண்டனர்.