tamilnadu

img

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு  ஆதரவாக ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், ஆக. 26-  தம் வாழ்வாதார கோரிக்கைகளுக்காக போராடிவரும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக, அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர்களை அழைத்துப்பேசி, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நாகப்பட்டினம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடம் முன்பு திங்கட்கிழமை மாநிலச் செயலாளர் சு.வளர்மாலா தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் வி.பாலசுப்பிரமணியன், ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் நடராஜன், பொருளாளர் எம்.பி. குணசேகரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் த. ஸ்ரீதர், மின்ஊழியர் மத்திய அமைப்பு தலைவர் வெற்றிவேல், இந்திய தொழிற்சங்க மைய மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.  தஞ்சாவூர் போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்திற்கு ஆதரவாக, தஞ்சாவூர் மாவட்ட ஒன்றிய, மாநில, அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில், தஞ்சாவூர், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ந. குருசாமி தலைமை வகித்தார். ஓய்வூதியர் சங்கங்களின் மாவட்டத் தலைவர் து. கோவிந்தராஜு துவக்கவுரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் இர.கலியமூர்த்தி நிறைவுரையாற்றினார். சிபிஎம் மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, தோழமை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.