பதவி உயர்வு வழங்க மறுக்கும் கோட்டப் பொறியாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
உடுமலை, செப்.11- முதுநிலை பட்டியலில் முறைப்ப டுத்தப்பட்ட அடிப்படையில் பதவி உயர்வு வழங்க மறுத்து வரும் தாராபு ரம் நெடுஞ்சாலை துறை கோட்டப் பொறி யாளரை கண்டித்து தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலை பணியாளர் சங் கத்தினர் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்க தாராபுரம் கோட்டம் 6 ஆவது பிரதிநிதித்துவப் பேரவை தீர்மானத்தின்படி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 7 நாட்கள் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடை பெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்ட கோரிக்கை தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை. இந்நி லையில், கோட்டப் பொறியாளரை கண் டித்து வியாழனன்று உடுமலைப் பேட்டை நெடுஞ்சாலை துறை அலுவல கம் முன்பு உட்கோட்டத்தலைவர் ஆர். ஜெகதீஸ்வரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உட்கோட் டச் செயலாளர் கே.செல்லமுத்து கோரிக்கையை விளக்கிப் பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட்ட கிளைத் தலைவர் எஸ்.மார்க்கண் டேயன், வட்டக் கிளையின் துணைத் தலைவர் ஆர்.பஞ்சாட்சரம், வட்டக் கிளையின் பொருளாளர் எஸ்.தங்க பாண்டியன் ஆகியோர் வாழ்த்தி பேசி னர். கோட்டத் தலைவர் கே.வெங்கிடு சாமி கண்டன உரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் ஆ.அம்சராஜ் நிறைவரையாற்றினார். இதில் பலர் கலந்து கொண்டனர்.