tamilnadu

img

ஆக்கிரமிப்பு என்ற பெயரில் ஏழைகளின் வீடுகளை இடிப்பதா? எம்.சின்னதுரை தலைமையில் சிபிஎம் நடத்திய போராட்டம் வெற்றி

ஆக்கிரமிப்பு என்ற பெயரில் ஏழைகளின் வீடுகளை இடிப்பதா? எம்.சின்னதுரை தலைமையில் சிபிஎம் நடத்திய போராட்டம் வெற்றி

புதுக்கோட்டை, அக்.24 - நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி. புதுக்கோட்டை அருகே சத்தியமங்கலம் மேலூரில் ஏழை களின் வீடுகளை இடிக்கும் நடவ டிக்கையை எதிர்த்து மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி வெள்ளிக் கிழமை எழுச்சிமிக்க போராட்டம் நடத்தி வெற்றிகண்டது. புதுக்கோட்டை மாவட்டம் குளத் தூர் தாலுகாவுக்கு உட்பட்ட சத்தியமங்கலம் மேலூரை சேர்ந்த வர்கள் அழகிரி மகன் மதியழகன், சின்னையா மகன் சந்திரசேகரன். இவர்கள் பல ஆண்டுகளாக மேலூர் அரசுப் புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்த வீட்டிற்கு மின் இணைப்பு, வீட்டு ரசீது, ரேசன், ஆதார் உள்ளிட்ட ஆவ ணங்களைப் பெற்றுள்ளனர். இந்நிலையில், மேற்படி வீடு கட்டியிருக்கும் இடம் ஊரணி புறம் போக்கில் இருப்பதாக தனிநபர் வழக்குத் தொடுத்ததன் அடிப்ப டையில் நீதிமன்றம் மேற்படி வீடு களை இடிப்பதற்கு உத்தரவிட்டு உள்ளது. இதனை எதிர்த்து பாதிக்கப் பட்டவர்கள் தரப்பில் நீதிமன்றத் தில் வழக்குத் தொடுத்துள்ளனர். மேற்படி வழக்கு நிலுவை யில் இருக்கும்போதே வெள்ளிக் கிழமை மேற்படி வீடுகளை இடிப்ப தற்கு இலுப்பூர் கோட்டாட்சியர் கோகுல்சிங், ஏடிஎஸ்பி மோகன் தாஸ், டிஎஸ்பி அப்துல்ரகுமான், வட்டாட்சியர் சோனை கருப்பையா உள்ளிட்ட அதிகாரிகள் மேலூர் கிராமத்திற்கு வந்தனர். ஏராள மான காவலர்களும் குவிக்கப்பட்ட னர். எம்.சின்னதுரை எம்எல்ஏ தலைமையில் போராட்டம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இருப்பதால் கால அவ காசம் தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் கந்தர்வ கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தலைமையில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. போராட் டத்திற்கு சிபிஎம் மாவட்டச் செய லாளர் எஸ்.சங்கர், சிபிஐ மாவட்டச்  செயலளார் எம்.என்.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்த னர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.சண்முகம், துரை.நாராயணன், டி.சலோமி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் சி. அன்புமணவாளன், எம்.ஆர்.சுப்பையா, ஒன்றியச் செயலாளர் எஸ்.ரகுபதி,  வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஜனார்த்தனன், செயலாளர் ஆர். மகாதீர், மாணவர் சங்க மாவட்டச்  செயலாளர் ஆர்.வசந்தகுமார் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பேச்சுவார்த்தை நடத்திய அதி காரிகள் வீடுகளை இடிக்கும் நடவடிக்கையை ஒரு வாரத்திற்கு தள்ளி வைப்பதாக தெரிவித்து கலைந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து 6 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த போராட்டம் முடி வுக்கு வந்தது.