காட்பாடியில் வந்தே பாரத் ரயிலை நிறுத்த கோரிக்கை
வேலூர்: கோவை-சென்னை வந்தே பாரத் ரயில் காட்பாடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்ப டாததால் மாணவர்கள், நோயாளிகள், சுற்று லாப் பயணிகள் அவதிக் குள்ளாகி வருகின்றனர். 150 ஆண்டுகளாக செயல்படும் காட்பாடி ரயில் நிலையத்தில், தின மும் 120 ரயில்கள் இயக்கப் பட்டு 30,000-க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். மைசூரு-சென்னை, பெங்களூரு-சென்னை வந்தே பாரத் ரயில்கள் இங்கு நிற்கும் நிலை யில், கோவை-சென்னை வந்தே பாரத் ரயில் மட்டும் நிறுத்தப் படவில்லை. இந்த நிலையில் வே லூர் மக்களவை உறுப்பி னர் டி.எம்.கதிர் ஆனந்த் தெற்கு ரயில்வே ஆலோ சனைக்குழு கூட்டத்தில் இக்கோரிக்கையை வலி யுறுத்தியுள்ளார். விரை வில் மேலும் 3 வந்தே பாரத் ரயில்கள் காட்பாடி வழியாக இயக்கப்பட உள்ளதாகவும் தெரி வித்தார். ரூ.350 கோடி யில் காட்பாடி ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் வேகமெடுத்து உள்ளன.