tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க கோரிக்கை

பாபநாசம், அக். 12-  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த பண்டாரவாடையில் மேலத்தெரு, வடக்குத் தெரு உள்ளிட்ட தெருக்கள் குண்டும், குழியுமாக நடந்து செல்லவோ, வாகனங்களில் செல்லவோ பயனற்ற நிலையில் உள்ளன.  மழை நாட்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கி, வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் சிரமத்துக்கு ஆளாக நேரிடுகிறது. சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரால் கொசுக்கள் உற்பத்தியாகி, பல்வேறு தொற்று வியாதிகள் பரவும் அபாயமுள்ளது.  இதுகுறித்து அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கூறும்போது, “பண்டார வாடையில் பல தெருக்களிலுள்ள சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. தெருக்களில் சேரும் குப்பைகள் தினமும் அள்ளப்படுவதில்லை. மாவட்ட நிர்வாகம் இதில் உரிய கவனம் செலுத்த வேண்டும்’’ என்றனர்.

பொதுமக்களுக்கு தீபாவளி பரிசுகள் 

திண்டுக்கல், அக். 12-  திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி சிறப்புநிலைப் பேரூராட்சியில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்றத் தலைவர் பிரதீபா கனகராாஜ் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு தீபாவளி புத்தாடை மற்றும் இனிப்புகளை  வழங்கினார். இந்நிகழ்வில் பேரூராட்சி  துணைத்தலைவர் ஆனந்தி பாரதிராஜா, நகரச் செயலாளர் -மாவட்டப் பிரதிநிதி எம்.வி.முருகன், முன்னாள் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.